October 18, 2025
  • October 18, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லாபம் நெட் பிளிக்ஸ் கையில் – ஆனால் முதல் ரிலீஸ் தியேட்டர்களில்
December 8, 2020

லாபம் நெட் பிளிக்ஸ் கையில் – ஆனால் முதல் ரிலீஸ் தியேட்டர்களில்

By 0 652 Views

லாபம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாஸன் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்தது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இப்படி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லாபம் படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாபம் படம் தியேட்டரில் வெளியான பிறகுதான் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகுமாம்.

ஏற்கனவே விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருந்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் ஜீ பிளக்ஸ் என்ற OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

படம் நன்றாக இருந்தாலும் தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அனைவரிடமும் இருந்தது. அதேபோல் லாபம் படத்தையும் நேரடி OTT யில் ரிலீஸ் செய்து விடுவார்களா என யோசிக்கும் நேரத்தில் தியேட்டரில்தான் ரிலீஸ் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் படக்குழுவினர்.

நல்ல விஷயம்தான்..!