January 30, 2026
  • January 30, 2026
Breaking News
July 14, 2018

செரினாவை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்ற கெர்பர்

By 0 1915 Views

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற நிலையில் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் கெர்பரின் கை ஓங்கியே இருந்தது. அதிரடியாக விளையாடிய கெர்பரின் ஆட்டத்துக்கு செரினா வில்லியம்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கெர்பர் கைப்பற்றினார்.

இரண்டு நாஎர் செட்டுகளில் 6-3, 6-3 என்று செரினா வில்லியம்சை வீழ்த்திய ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.