டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை. ஆழ்வார்பேட்டை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்
மக்கள் மத்தியில் நீரிழிவு தடுப்பு மற்றும் நீரழிவு மேலாண்மை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்…
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் விழிப்புணர்வு வாகன திட்டத்தை தொடங்கி வைத்தார் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள 100 அமைவிடங்களில் 100 நாட்களுக்கு, சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இவ்வாகனம் பயணித்து விழிப்புணர்வை உருவாக்கும் மேலும் நீரிழிவுக்கான அடிப்படை ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்ளும்.
‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபெட்டிஸ் என்ற பெயரில் காவேரி மருத்துவமனை நடத்தும் ஒரு வருடாந்திர நிகழ்வான, நீரிழிவுக்கான இலவச ஸ்கிரீனிங் சோதனை மற்றும் அது குறித்த கல்வி நிகழ்ச்சியின்போது இச்செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை, டிசம்பர், 2023: காவேரி குழும் மருத்துவமனைகளின் அங்கமான சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை, டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற செயல்திட்டத்தை தொடங்கியிருக்கிறது. நீரிழிவு மற்றும் அது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க நாட்கள் காலஅளவிற்கு சென்னையில் 100 அமைவிடங்களுக்கு இந்த மொபைல் வாகனம் பயணிக்கவிருக்கிறது. இந்த நடமாடும் வாகனத்தில் நீரிழிவுக்கான ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்ளவும். விழிப்புணர்வை உயர்த்தவும் மருத்துவ, செவிலியர் மற்றும் உணவுமுறை நிபுணர்கள் அடங்கிய குழு செயல்படும். நீரிழிவு மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக டிஷ்யூம் டிஷ்யூம் டயாபெட்டிஸ் என்ற பெயரில் ஒரு வருடாந்திர கண்காட்சி நிகழ்வை காவேரி மருத்துவமனை நடத்துகிறது.
இந்நிகழ்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் கலந்துகொண்ட ஏறக்குறைய 600 பங்கேற்பாளர்கள் இங்கு நடைபெற்ற இலவச பரிசோதனைகளின் மூலம் பயனடைந்தனர். அத்தியாவசிய உடல் அறிகுறிகள், ரேண்டம் இரத்த சர்க்கரை சோதனை, கொழுப்பு அளவை கண்டறிவதற்கான லிபிட் புரொஃபைல் சோதனை, பாத ஆய்வு, உணவுமுறை ஆலோசனை, இயன்முறை சிகிச்சை ஆலோசனை, கண் மற்றும் பற்கள் பரிசோதனை ஆகியவை இச்சோதனைகளுள் இடம்பெற்றிருந்தன.
உடல்நலத்திற்கான இந்த ஸ்கிரீனிங் சோதனைகளுக்கும் கூடுதலாக இக்கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு ஸ்டால்களை சுற்றிப் பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகள், துணை உணவுப்பொருட்கள், காலணிகள் மற்றும் நீரிழிவு நிலையில் பராமரிப்புக்கான வேறுபிற தயாரிப்புகள் இந்த ஸ்டால்களில் இடம்பெற்றிருந்தன.
அளவுக்கு இந்நிகழ்வின்போது டாக்டர். கே. பரணிதரன் மூத்த ஆலோசகர், நீரிழிவு மருத்துவர் பேசுகையில், ‘நீரிழிவு என்பது சத்தமின்றி உட்புகுந்து தாக்கும் ஒரு உயிர்கொல்லி அறியாமை என்பதில் மறைந்து இது வளரக்கூடியது. உடற்பருமன் உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, பரம்பரை மரபியல் அம்சங்கள் வயது மற்றும் குடும்பத்தில் பிறருக்கு நீரிழிவு இருந்த வரலாறு போன்ற இடர்காரணிகள் பல நேரங்களில் உரிய கவனம் இன்றி உதாசீனம் செய்யப்படுகின்றன.
நாட்பட்ட நோயான நீரிழிவு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதனை வெல்வதற்கான வழிமுறை அதுகுறித்த விழிப்புணரவில் அடங்கியிருக்கிறது.
நீரிழிவின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்திருப்பது, அவற்றை அடையாளம் காண்பது மற்றும் அது இன்னும் முன்னேற்றம் அடையாமல் தடுக்கின்ற சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது என்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியே ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபெட்டிஸ் என்ற நிகழ்வாகும்.
இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்திற்கான கருப்பொருளாக, “உங்களது இடரை அறிந்திடுங்கள், உங்களது பொறுப்பை உணர்ந்திடுங்கள்” என்பது தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த கருப்பொருளையொட்டி டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என அழைக்கப்படும் ஒரு சமூக தொடர்பு மற்றும் விழிப்புணர்வு திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.
இந்த செயல்திட்டத்தின் வழியாக சென்னையில் அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடைவது எமது நோக்கமாகும். பல்வேறு அமைவிடங்களில் நடத்தப்படும் இச்செயல்திட்டத்தின் வழியாக நீரிழிவை தடுப்பது மற்றும் அதன் மேலாண்மை என்பது குறித்து பொதுமக்களுக்கு நாங்கள் தகவலளிப்போம் மற்றும் கல்வியின் மூலம் விழிப்புணர்வை அதிகரிப்போம்.
நீரிழிவு வருவதற்கு அதிக இடர்வாய்ப்புள்ள நபர்கள் மேலதிக பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அவர்களை நாங்கள் ஊக்குவிப்போம் மற்றும் வலியுறுத்துவோம். நீரிழிவுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளை அனைவரும் அணுகிப்பெறும் வகையில் சலுகை விலை கட்டணங்களில் அவைகளை நாங்கள் வழங்குவோம்..” என்று குறிப்பிட்டார்.
“நீரழிவு இருப்பதாக அதிகாரபூர்வமாக அடையாளம் காணப்பட்ட 77 மில்லியன் நபர்கள் (11 இந்தியர்களில் 1 நபருக்கு நீரிழிவு) இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, உலகளவில் நீரிழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
உலகளவில் நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஆறு நபர்களுள் ஒருவர் (17%) இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது கவலையளிக்கும் புள்ளிவிவரமாகும். அச்சுறுத்தும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நீரிழிவு வராமல் தடுப்பதும் அதன் திறன்மிக்க மேலாண்மையுமே உடல்நல பராமரிப்பு சேவை வழங்குனர்களாகிய எங்களது கடமைப் பொறுப்பாக இருக்கிறது, டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற இந்த முன்னெடுப்பு, இம்மாநகரில் வாழும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வேறுபட்ட வயது குழுக்களைச் சேர்ந்த மக்களை சென்றடைவதற்கு எங்களுக்கு நிச்சயம் உதவும்.
இந்த முயற்சியின் மூலம் நீரிழிவு குறித்து மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி கற்பிப்பதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுமாறு அவர்களை வலியுறுத்துவதும் எமது நோக்கமாகும்.” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.
I