டாக்டர் K விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்..!
சென்னை, 29 அக்டோபர் 2025 :பல குடும்பங்களுக்கு பக்கவாதம் / ஸ்ட்ரோக், எவ்வித முன்னெச்சரிக்கை இல்லாமல் நடத்தப்படும் தாக்குதலாகவே இருக்கிறது; சில நிமிடங்களில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சையானது அவர்களின் வாழ்க்கைக் கதையை மாற்றி மேம்படுத்தி புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.
உலக பக்கவாத தினம் 2025 – ஐயொட்டி நடத்தப்பட்ட வெற்றி பெருமித நிகழ்வின்போது தனது 4 ½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் வழங்கியிருக்கும் நம்பிக்கை தரும் விளைவுகளை இம்மருத்துவமனை பகிர்ந்து கொண்டது; பக்கவாத அறிகுறிகள் தோன்றிய பிறகு மிக முக்கியமான ஆரம்ப மணி நேரங்களுக்குள் அந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தனிச்சிறப்பான முன்னெடுப்பு திட்டமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், காவேரி மருத்துவமனையின் பக்கவாத சிகிச்சைக் குழுக்கள், சென்னையில் 956 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இவர்களுள், 120+ நோயாளிகள் முதல் அறிகுறி தோன்றியதிலிருந்து 4 ½ மணி நேரங்களுக்குள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். இவர்களுள் 82+ நபர்களுக்கு பக்கவாதத்திலிருந்து முழுமையான மீட்சி கிடைத்திருக்கிறது. நிரந்தர சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கு உகந்த நேரத்திற்குள் மூளைக்கு இரத்தஓட்டம் மீண்டும் இந்நபர்களுக்கு நிலைநாட்டப்பட்டது என்பதையே இது உணர்த்துகிறது.
வடபழனி, காவேரி மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். பெரியகருப்பன் பேசுகையில், “பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும்போது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது. கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், மூளையிலுள்ள ஆயிரக்கணக்கான செல்கள் இழக்கப்படுகின்றன. ஆனால், நோயாளிகள் மிக விரைவாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறபோது அவர்களது உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பேசவும், நடமாடவும் மற்றும் சுதந்திரமாக வாழவும், நடமாடவும் அவர்களது அவசியமான திறனை சேதமின்றி பாதுகாத்து எங்களால் காப்பாற்ற முடியும். இத்தகைய பெரிய பாதிப்பு நிகழ்விற்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து முழுமையான மீட்சி பெற்று, இத்தகைய நோயாளிகள் நலமுடன் நடந்து செல்வதை பார்ப்பதே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கிறது.” என்று கூறினார்.
உரிய நேரத்திற்குள் சிகிச்சைப் பெறுவது ஏன் முக்கியமானது
மூளையின் ஒரு பகுதிக்கு செல்லும் இரத்தஓட்டம் தடுக்கப்படும்போது அல்லது உறையும்போது மூளையின் திசுவிற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் பக்கவாதம் நிகழ்கிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதனால் ஏற்படும் இழப்பும், சேதமும் நிரந்தரமானதாக இருக்கக்கூடும்.
பக்கவாதத்தின் அறிகுறிகள் வெளிப்பட்டதிலிருந்து முதல் 4 ½ மணி நேரங்கள், “தங்கமான நேரம்” “golden window” என அழைக்கப்படுகிறது. பக்கவாதத்தை ஏற்படுத்துகின்ற இரத்தஉறைவு கட்டிகளை அகற்ற அல்லது கரைக்க மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கக்கூடிய காலஅளவாக இது இருக்கிறது. இந்த சாளர காலஅளவிற்குள் துரிதமாக செயல்படுவதில் தான், ஆயுட்காலம் முழுவதும் நீடிக்கின்ற திறனிழப்பிற்கும் மற்றும் முழுமையான மீட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடும்.
ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையின் இடையீடு;டு கதிர்வீச்சியல் (நரம்பியல்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஜி. சதீஷ் இது குறித்து கூறியதாவது: “பக்கவாதத்திற்கான சிகிச்சை என்பது, அறிவியல், துல்லியம் மற்றும் குழுவாக இணைந்து செயல்படுவது என்பவற்றின் ஒருங்கிணைந்த கலவையாகும். உரிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நோயாளிகள் வந்து சேரும்போது, அவர்களுக்கு சிகிச்சையினால் கிடைக்கும் விளைவுகள் உண்மையிலேயே வியக்க வைக்கின்றன. அவர்களது பேச்சுத் திறனையும், ஆற்றலையும் மற்றும் நம்பிக்கையையும் அவர்கள் மிக வேகமாகவே திரும்பப் பெறுகின்றனர். விதியை தீர்மானிப்பதாக நிமிடங்கள் இருக்கின்ற பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களுள் ஒன்றாக பக்கவாதம் இருக்கிறது.”
கடந்த பத்து ஆண்டுகளில், பக்கவாதத்திற்கான சிகிச்சையில் புரட்சிகரமான பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சிரை ஊடாக செலுத்தப்படும் “இரத்த உறைவுக் கட்டியை” (க்ளாட் பஸ்டர்) உடைக்கும் மருந்துகள் மற்றும் இயந்திர வழி இரத்தக்கட்டி நீக்கம் என்பவை நவீன சிகிச்சை உத்திகளுள் சிலவாகும்.
சென்னை மாநகரில், ஆழ்வார்பேட்டை, வடபழனி மற்றும் ரேடியல் சாலை ஆகிய அமைவிடங்களில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் பக்கவாத மீட்பு சிகிச்சைப் பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. மிக நவீன இமேஜிங் சாதனங்கள், இடையீட்டு சிகிச்சை செயல்முறைகளுக்கான அறைகள் மற்றும் தீவிர பக்கவாத சிகிச்சை மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை ஒருங்கிணைந்து, சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்குகின்றன.
“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீண்டும் இயல்பாக நடப்பதையும், பேசுவதையும் மற்றும் தங்கள் பணி வாழ்க்கைக்கும், குடும்பங்களுக்கும் மீண்டும் திரும்புவதையும் நாங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். பாதிப்பு அறிகுறிகள் தோன்றியவுடன் விரைவாகவே சிகிச்சைக்கு எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். “திரும்பவும் விரைவாக இயல்பான நபராக நான் உணர்கிறேன் என்று ஒரு நோயாளி புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் சொல்லும் தருணம் தான் எந்தவொரு மருத்துவரும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற மிகப்பெரிய சிகிச்சை விளைவாக இருக்கிறது.” என்று ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின், இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். சத்ய நாராயணன் கூறினார்.
பொதுமக்களை தொடர்புகொள்ளும் நிகழ்ச்சிகள் வழியாகவும் மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மக்களின் புரிதலை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட கூட்டாண்மைகள் வழியாகவும், இது குறித்த விழிப்புணர்வை வலுவாக்கும் பணியை இம்மருத்துவமனை தொடர்ந்து செய்து வருகிறது.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “விரைவாக செயல்படுவது, சரியான சிகிச்சை அளிப்பது மற்றும் வாழ்க்கையை திரும்ப வழங்குவது என்பதே சென்னை வாழ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் வாக்குறுதியாக இருக்கிறது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிப்பது மட்டும் எமது இலக்கு அல்ல. இந்த மாநகரில், அதற்கான பதில்வினையான சிகிச்சை வழிமுறைகளை மேம்பட மாற்றுவது எமது நோக்கமாகும். பக்கவாத தாக்குதலின் அறிகுறிகளை குடிமக்கள் ஒவ்வொருவரும் அடையாளம் காண இயலுமானால் மற்றும் உடனடியாகவே பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க முழுத்திறன் கொண்ட மருத்துவமனையை அணுகுவார்கள் என்றால், எண்ணற்ற உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் மற்றும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு ஏற்படும் திறனிழப்புகள் நிகழாமல் தடுக்க முடியும்.” என்று கூறினார்.
பக்கவாத சிகிச்சைக்கு அவசரநிலை உதவி எண்: 📞 044 4000 6000