January 23, 2025
  • January 23, 2025
Breaking News
April 23, 2019

கஸ்தூரியின் கைவசம் மூன்று கேஸ்கள்

By 0 812 Views

வம்பு தும்புகளுக்குப் பெயர் பெற்ற கஸ்தூரி ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘இபிகோ302’ என்ற அந்தப்படத்தில் கஸ்தூரி துர்கா ஐ.பி.எஸ் என்கிற போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். இந்தப்படத்தை செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி கஸ்தூரியின் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளதாம். இதில் இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி, வின்ஸ்குமார் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி அவர் கூறியதிலிருந்து…

“கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி   படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது. செத்தவன் யார் என்றும் தெரியவில்லை. கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள், வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள ஒரு பிரச்சனை.

இன்னொரு படு கொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ் தான் கஸ்துரி.

ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு… நிறைவாகச் செய்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

இந்தப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே  புதுமுகம் நிர்மல்ராஜ் என்பவரை வைத்து ‘எதிர்வினை’ என்கிற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதையும் இதே செளத் இந்தியன் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது..!”