January 23, 2026
  • January 23, 2026
Breaking News
January 28, 2020

தனுஷ் வெளியிட்ட கர்ணன் படத்தின் புகைப்படம்

By 0 795 Views

தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்த விஷயம்.

வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை, மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம், வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் திரைப்படம், பெரும் பாராட்டுகளைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.

அதே போன்று இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படமும் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை இந்த இரு படைப்புகளும் ஓங்கி ஒலிக்கச் செய்தது. அத்துடன் தமிழ் சினிமா வரலாற்றில் தங்களுக்கென முக்கிய இடத்தையும் தக்க வைத்துக் கொண்டன.

இந் நிலையில்தான் கலைப்புலி எஸ்.தாணு – மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

கர்ணன் தனுஷின்கதாபாத்திரமும் கெட்அப்பும் எவ்வாறு அமையும் என்னும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

அந்தப் படம் கீழே…

Karnan Dhanush still is out

Karnan Dhanush still is out