April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மனைவியை தைரியமாக வெளியே அழைத்து வரும் ரியோ ராஜ் – கண்ணம்மா என்னம்மா பாடல் வெளியீட்டில் கலகல
October 17, 2021

மனைவியை தைரியமாக வெளியே அழைத்து வரும் ரியோ ராஜ் – கண்ணம்மா என்னம்மா பாடல் வெளியீட்டில் கலகல

By 0 396 Views

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது.

அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, Noise and Grains தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “கண்ணம்மா என்னம்மா”.

தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ JB இயக்கியுள்ள இப்பாடலின் வெளியீட்டு விழாவில் சின்னத்திரைபிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நடிகர் ரக்‌ஷன் பேசியது…

ரியோ என் மச்சான். இவங்களோட திறமைய நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கொஞ்ச வாரம் முன்னாடி, என்னோட சாங் ரிலீஸானப்ப ரியோவை கால் பண்ணி, மச்சான் உன்ன கூப்பிடனுமானு கேட்டேன், ஆனா உன் போட்டோ இருந்தாவே, நான் வந்துருவேனு சொன்னான். அந்தளவு நாங்க க்ளோஸ். பவித்ரா பத்தி இங்க சொல்லனும் அவங்க ஒரு நல்ல குக். இவங்க ரெண்டு பேருமே எங்க செல்லம்.

பாடகர் ஷாம் விஷால் ..

“பிரிட்டோ போன் செய்து கண்ணம்மா என ஒரு பாடல் இருக்கு பாடுகிறாயா எனக் கேட்டார். நான் கண்ணம்மா என ஆரம்பிக்கிற மாதிரி ஒரு பாடலும் பாடியதில்லை. அதற்காகத் தான் காத்திருந்தேன் அதனால் உடனே ஓகே சொன்னேன். கண்ணம்மா பாடல் எனக்கு மிக முக்கியமான பாடலாக இருக்கும்..!”

Noise & Grains சார்பில் கார்த்திக்..

“எங்களை அணுகும் சுயாதீன கலைஞர்களை வைத்து, பல வருடங்களாகவே பாடல்களை உருவாக்கி வருகிறோம். கொரோனாவிற்கு பிறகு ஒரு மார்க்கெட் ஓபனாகியுள்ளது, அதனை சரியான வகையில் உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அதைத்தான் தற்போது செய்து வருகிறோம்…!”

Noise & Grains சார்பில் மகாவீர்…

“Noise & Grains மூலம் இந்த முயற்சி பல வருடங்களாக நாங்கள் பேசி வந்ததுதான். இந்த நிறுவனத்தில் அனைத்தையுமே திட்டமிட்டு தான், பெரிய அளவில் செய்து வருகிறோம். அனிருத் வைத்து ஆரம்பித்ததில் இருந்து, நிகில் அண்ணாவை வைத்து பிரஸ் மீட் வைத்து, அறிமுகப்படுத்தியது வரை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து வருகிறோம். சுயாதீன கலைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அனைவரும் கொண்டாடும் வகையில் தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்..!”

இயக்குநர் பிரிட்டோ ..

“ரீகன் தான் இந்தப்பாடல் குறித்து முதலில் சொன்னான். ரியோவிடம் சொன்ன போது அவன் வேண்டாம் என்று தான் சொன்னான். அதன் பின் பாடல் கேட்ட பிறகு, அவனுக்கு பிடித்து, அதை வீடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது. ஒளிப்பதிவாளர் S.மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம். இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி..!”

நடன அமைப்பாளர் அபு & சால்ஸ்…

“எனக்கு முதன் முதலில் ஆல்பம் செய்த போது பயமாக இருந்தது. இப்போது பயம் போய் விட்டது. பிரிட்டோ மிகப்பெரிய சுதந்திரம் தந்தார். ரியோ, பவித்ரா பெரிய அளவில் ஒத்துழைப்பு தந்தனர். அவர்கள் நிறைய டேக் எடுக்கவில்லை. மிகச்சிறப்பாக செய்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது..!”

நடிகர் ரோபோ சங்கர்0…

“ஒரு பிரமாண்ட ஆடியோ லாஞ்ச் போல் இது இருக்கிறது. இதனை உருவாக்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பிரிட்டோ என் அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள். பாடல் மிக அருமையாக இருந்தது. பெரும் பிரபலங்களை மேடையிலேயே இயக்கும் நிகில் இப்போது படம் நடித்து முடித்து விட்டார் அவருக்கு வாழ்த்துக்கள்…!”

ராஜமோகன் பேசியதாவது..

“விஜய் டீவி பிரபலங்கள் இங்கு நிறைந்துள்ளார்கள். குக் வித் கோமாளி மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திய பவித்ராவிற்கு, இந்த மேடை கிடைத்திருப்பது மகிழ்ச்சி. எங்கு சென்றாலும் மனைவியை தைரியமாக அழைத்து செல்லும் எங்கள் தம்பி ரியோவிற்கு வாழ்த்துகள்..!”

டி எஸ் கே…

“கண்ணம்மா எல்லோருக்கும் வெற்றியை தந்துள்ளது. அதே போல் ரியோ பவித்ராவிற்கு இந்த பாடல் வெற்றியை தர வாழ்த்துக்கள். பிரிட்டோ என்னுடன் காலேஜில் படித்தவர், அவருடைய மேடையில் இன்று நிற்பது மகிழ்ச்சி..!”

நடிகர் பிரஜின் ….

“ரியோ எனக்கு பிறகு ஆங்கராக வந்தவர் என்றாலும் இன்று அவர் ஜெயிப்பது மிக மகிழ்ச்சி. பிரிட்டோ என்னுடன் நடித்துள்ளார் ஆனால் அப்போதே உனக்கு இயக்கம் தான் சரியாக வரும் என்று சொன்னேன். இப்போது இம்மாதிரி பாடல்கள் வந்து, ஜெயிப்பது மகிழ்ச்சி.!”

நடன இயக்குநர் சாண்டி..

“பாடல் செமையா இருக்கு, சூப்பரா இருக்கு. ஒரு பாடல் பார்த்தால் ஜாலியாக இருக்கனும் அதை சூப்பராக செய்திருக்கிறார்கள். அபு, சால்ஸ் டீமாக கலக்கியிருக்கிறார்கள். ரியோ முன்னாடியே இந்த பாடலை காட்டி விட்டார்..!”

நடன இயக்குநர் ஃஷெரிஃப்..

“ரியோ, பவித்ரா இருவருமே சூப்பர் டான்ஸர்ஸ் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அபு என்னிடம் வேலை பார்த்தார் அவர் தனியாக செய்த பாடலை பார்க்கத்தான் வந்தேன். இந்த மாதிரி தனி ஆல்பங்கள் வருவது மகிழ்ச்சி..!”

நடிகர் ரியோ …

“என் நட்புக்காக இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஒரே நாளில் இதை பிளான் பண்ணி, பிரிட்டோ மிக அழகாக எடுத்து விட்டார். ஷாம் விஷால் அருமையாக பாடியுள்ளார். Noise & Grains மிக அழகாக வெளியிட்டு விட்டார்கள், அவர்களுக்கு நன்றி..!”

பவித்ரா லக்‌ஷ்மி பேசியதாவது…

“ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம் பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த Noise & Grains க்கு நன்றி…!”