தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக 49-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் மக்களின் பிரதிநியாக நானும் பங்கேற்பேன் என்று அறிவித்திருந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் இன்று போராட்டத்தில் பங்கேற்றார்.
அங்கு கமல் பேசியதிலிருந்து…
“எனக்கென்று ஒரு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கமல்ஹாசன். நடிகன் என்பதை விட நான் மனிதன் – நான் தமிழன். உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபாரப் பேராசையின் ஒரு கோரமுகம்.
இதுபற்றி எனக்கு பல்வேறு செய்திகள் வருகின்றன. நான் அவர்களிடம் பேசவில்லை. நேராக இங்கு வந்துவிட்டேன். நீங்கள் காசு கேட்பதாக சிலர் என்னிடம் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க தயாராக உள்ளனர். இதையும் நான் கேள்விப்பட்டது தான்.
பிள்ளைக்கறி சாப்பிட்டால்தான் வியாபாரம் நடக்க வேண்டும் என்றால், அதுநடக்கக்கூடாது. நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை. ஆலைக்கு எதிராக எனது குரல் எங்கெங்கு கேட்குமா அங்கெல்லாம் செல்வேன்..!”