July 1, 2025
  • July 1, 2025
Breaking News
April 30, 2020

ஜோதிகா சர்ச்சை பேச்சு சீசன் 2 ஆரம்பம்

By 0 647 Views

கொரோனா கோரத்தால் முடங்கிக் கிடக்கும் ஆன் லைன் மீடியாக்களுக்கு ஒரு வார தீனியாக ஜோதிகா பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது இல்லையா?

அதன் பாலோ அஃப் ரிப்போர்ட் இதோ:

ஜோதிகா “கோயில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்” என்று சொல்லியிருந்தார் அல்லவா..?

தஞ்சாவூரில் கத்துக்குட்டி சரவணன் புது பட ஷூட்டிங் நடந்தபோது ராசா மிராசுதார் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் குறித்துதான் அவர் அப்படி ப் பேசினார்.

இப்போது ஜோதிகா குறிப்பிட்ட அதே மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவரை பாம்பு கடித்து விட்டது.

இதையடுத்து ஆட்களை வைத்து சுத்தம் செய்த போது, கொடிய விஷம் உடைய 5 கட்டு விரியன் பாம்புகள் உட்பட 10 பாம்புகள் அங்கே பிடிக்கப்பட்டு இருக்கிறது.

”  இப்ப புரியுதா? ஃபண்ட் எங்கே வேணுமுன்னு? ” – என்று கேட்டு ‘ ஜோதிகா பேச்சு சீசன்2 ” ஆரம்பித்துவிட்டது.

லாக் டவுன் நீடித்தால் இதை வைத்து ஓட்டுவார்கள்..!