October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • சீரியஸ் படங்கள் எடுக்கும் நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிரிப்புப் படமாக வரும் ஜெ.பேபி
March 29, 2022

சீரியஸ் படங்கள் எடுக்கும் நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிரிப்புப் படமாக வரும் ஜெ.பேபி

By 0 600 Views

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ‘ ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பா.இரஞ்சித் தயாரிப்பில்
பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது.

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே சீரியஸான கருத்துக்களை கொண்டதாக இருக்கும் என்ற விஷயத்தை உடைத்து முற்றிலும் நகைச்சுவையாக உருவாகி இருக்கும் படம் இது.

சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர்.

நடிகர் தினேஷ் , மாறன் , ஊர்வசி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம்
நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது.

விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது.

நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.