August 30, 2025
  • August 30, 2025
Breaking News
December 8, 2018

பா.இரஞ்சித் களமிறக்கும் இரண்டாவது குண்டு

By 0 1161 Views

இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு தன் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றித் திரைப்படமாக அமைந்ததி ல் மட்டற்ற மகிழ்ச்சி.

விமர்சகர்களும் கொண்டாடிய அந்தப் படத்தைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸின் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறார் பா.இரஞ்சித். தலைப்பே மிரட்டலாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ‘அதியன் ஆதிரை’ என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.

இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.

இதில் கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோரும் நடிக்க, இசையமைப்பாளராக ‘தென்மா’ அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்ற, கலை இயக்குநராக தா.ராமலிங்கம் பணியாற்றுகிறார். பாடல்களைஉமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு எழுதுகிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த போஸ்டர், படம் போடப்போகும் குண்டு பற்றி இப்போதே விவாதத்தைத் தொடங்கி வைக்கிறது.