March 19, 2024
  • March 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்
September 14, 2021

ஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கிய அனபெல் சேதுபதி – ஒரு அறிமுகம்

By 0 679 Views

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம், ஜி. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபதி”

விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். 

உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, தீபக் சுந்தர்ராஜன் இணைந்து பத்திரிக்கையாளர் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பேசியதாவது.. 

“நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு படத்தின் கதை தெரியாது. படம் பற்றி எதுவும் தெரியாது, அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார் சந்தோஷமாக இருந்தது.

இங்கு வந்து பாடல்கள் டிரெய்லர் பார்த்த போது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி..!”

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பேசியதாவது….

“தயாரிப்பாளர்தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி நடித்த அனைவருக்கும் நன்றி. இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம்.

உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள். அப்பாவிடம் மனித பண்புகளை தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். இயக்கத்தை நான் இயக்குநர் ஏ எல்் விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன்.

தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன்..!”

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் –

கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), கிருஷ்ணா கிஷோர் ( இசை ), வினோத் ராஜ்குமார் N (கலை), பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பாளர்), தினேஷ் (நடனம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்), N உதய் குமார் (ஒலி கலவை )