November 23, 2024
  • November 23, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • வர்த்தகம்
  • இந்தியன் வங்கி- 30 செப் 2022 நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை முடிவுகள்
November 4, 2022

இந்தியன் வங்கி- 30 செப் 2022 நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை முடிவுகள்

By 0 447 Views
  • வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது
  • இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது  
  • நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்துள்ளது  

நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 12% உயர்ந்து ₹1225 கோடியாகநிலவுகிறது. இது செப் 21ல் ₹1089 கோடி ஆகும்.

இயக்க லாபம் செப் 22ல் 11% வளர்ச்சி ஆ-ஆ எனும் அடிப்படையில் இது ` 3629கோடி. இது ₹3276 கோடி செப் 21ல். ஆகும்.

நிகர வட்டி வருவாய் செப் 22ல் 15% வளர்ச்சி ஆ-ஆ எனும் அடிப்படையில் இது ` 4684கோடி. இது ₹4084 கோடி செப் 21ல். ஆகும்.

கட்டணம் மீது ஆதாரப்பட்டிருக்கும் வருவாய் ஆ-ஆ எனும் அடிப்படையில் இது 18% அதிகரிப்பு. செப் 22ல் இது ₹723 கோடி.

செலவுக்கும் வருவாய்க்குமான விகிதம் 44.27% செப் 22ல். இது செப் 21ல் 45.85% ஆகும்.

உள்நாட்டு நிகர வட்டி மார்ஜின் செப் 22வில் 3.20 % . இது செப் 21ல் 2.89% ஆகும் .

சொத்துக்களின் மீதான வருவாய் (ஆர் ஓ ஏ) செப் 22ல் உள்ள நிலவரம் 0.71% . இது செப் 21ல் 0.69% ஆகும்.

பங்கு மூலதனத்தின் மீதான ஈட்டம் (RoE) நிலவரம் செப் 22வில் 13.83%, செப் 21ல் இது 13.31%. இது 52 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம்.

கொடுக்கப்பட்ட கடன் தொகைகளில் முன்னேற்றம், (ஆ-ஆ எனும் அடிப்படையில் – 14% வளர்ச்சி) இது செப் 22ல் ₹437941 கோடி . இது செப் 21ல் ₹385730 கோடியாக இருந்தது.

ராம் (RAM) (விவசாயம், சில்லறைக் கடன், மற்றும் எம்எஸ்எம்இ) எனும் பிரிவில் வழங்கப்பட்ட கடன்கள் 13%அதிகரிப்பு. செப் 22ல் இது ₹255256 கோடி. செப் 21ல் இது ₹226501 கோடி.

இவை முறையே 14%, 15%, 9% உயர்வு ஆகும்) இது ஆ-ஆ எனும் அடிப்படையில். ராம் (RAM) (விவசாயம், சில்லறைக் கடன், மற்றும் எம் எஸ் எம் இ, இவற்றின் பங்களிப்பு உள்நாட்டு கடன் வகைகளில் 62% ஆகும்.) வீட்டு வசதிக் கடன் (அடமானக் கடனும் சேர்த்து) 11% வளர்ச்சி, வாகனக் கடன் 28% ,தனிப்பட்ட கடன் வகைகள் 26% தங்க நகைக் கடன் 19%

வைப்பு நிதிகள் வளர்ச்சி, 7% ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் செப் 22வில் வளர்ச்சி கண்டு ₹588860 கோடியாக நிலவியது.

காசாவின் வளர்ச்சி 7%, இது ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் நடப்புக் கணக்குகளின் (9% ) வளர்ச்சியால் நிகழ்ந்தது சேமிப்புக் கணக்குகளின் வளர்ச்சி ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 7% ஆகும்.

காசா விகிதம் 41% ஆகும்.

ஜிஎன்பிஏ 226 அடிப்படைப் புள்ளிகள் (ஆ-ஆ எனும் அடிப்படையில்) குறைந்து, 9.56% என்று செப் 21ல் இருந்ததிலிருந்து, 7.30% என்று செப் 22 வில் ஆக நிலவியது. என்என்பிஏ 176 அடிப்படைப் புள்ளிகள் (ஆ-ஆ எனும் அடிப்படையில்) குறைந்து, 3.26% என்று செப் 21ல் இருந்ததிலிருந்து, 1.50% என்று செப் 22 வில் ஆக நிலவியது. 

ஒதுக்கீடுகளுக்கான விகிதம் (பி சி ஆர்) ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 776 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம். செப் 22வில் இது 91.08% மற்றும் செப் 21ல் 83.32% ஆகும்.

மூலதனப் போதுமை விகிதம் 16.15 %. சி இ டி – I ஆண்டிற்கு ஆண்டு எனும் அடைப்படையில் 58 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம் (அ-ஆ என்பதாக இது 12.26% ஆகும்) 

மூலதனம் 55 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம் கண்டு 12.89% ஆக இருந்தது.

நிகர லாபம் செப் 22வில் ₹ 1225 கோடி, இது ஜூன் 22ல் ₹ 1213 கோடி.    

இயக்க லாபம் செப் 22வில் ₹ 3629 கோடி, இது ஜூன் 22ல் ₹3564 கோடி. 

நிகர வட்டி வருவாய் வளர்ச்சி 3%. செப் 22வில் ₹ 4684 கோடி, இது ஜூன் 22ல் ₹4534 கோடி. 

வட்டியல்லாத வருவாய் 14% வளர்ச்சி. செப் 22வில் இது ₹1828 கோடி, ஜூன் 22ல் இது ₹1604 கோடி.

காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் சொத்துக்களின் மீதான வருவாய் (ஆர் ஓ ஏ) 2 அடிப்படைப் புள்ளிகளில் மாற்றம் கண்டுள்ளது. இது செப் 22ல் 0.71% ஆக இருந்தது . ஜூன் 22வில் இது 0.73% ஆகும்.

பங்குகளின் மீதான ஈட்ட வருவாய் செப் 22ல் 13.83% ஆகும். இது சென்ற காலாண்டில் 14.18% ஆக நிலவியது.

செலவுகளுக்கும் வருவாய்க்குமான விகிதம் செப் 22ல், 44.27% . இதுவே சென்ற காலாண்டில் 41.94% ஆக நிலவியது.

நிகர வட்டி மார்ஜின் (உள்நாடு) 10 அடிப்படைப் புள்ளிகள் காலாண்டிற்குக் காலாண்டு என்பதாக முன்னேற்றம். இது செப் 22ல் 3.20%, ஜூன் 22ல் 3.10%.

முக்கிய அம்சங்கள் (அரையாண்டு செப் 22 –ஒப்பீடு செப் 21)

நிகர லாபம் 7% ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் உயர்ந்துள்ளது. இது H1FY23ல் ₹2439 கோடி. இது H1FY22ல் ₹2271 கோடி .

இயக்க லாபத்தில் 8% முன்னேற்றம். இது ₹6691 கோடியிலிருந்து ₹7194 கோடி ஆக வளர்ச்சி.

நிகர வட்டி மூலம் பெற்ற வருவாய் 14% வளர்ச்சி. இது ₹ 8078 கோடி யிலிருந்து உயர்ந்து ₹ 9218 கோடியாக உள்ளது.

சொத்துக்களின் மீதான வருவாயில் எந்த மாற்றமும் இல்லை. இது 0.72% ஆகும்.

பங்குகளின் மீதான ஈட்ட வருவாய் 14% ஆகும். இது H1FY22ல் 14.30%

செலவுகளுக்கும் வருவாய்க்குமான விகிதம் 43.14%. இது H1FY22ல் 43.60%

நிகர வட்டி வருவாய் (உள்நாடு) 28 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்துள்ளது, ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில். 2.87% லிருந்து 3.15% க்கு மாற்றம்.

வர்த்தகம்: (முக்கிய அம்சங்கள் 30 செப்டம்பர் ,2022)

மொத்த வர்த்தகம் ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் 10% வளர்ச்சி கண்டு ₹1026801 கோடி எனும் நிலையை, செப் 22வில் அடைந்துள்ளது. இது செப் 21ல் ₹937202 கோடியாகும். இது ஜூன் 22 ல் ₹1009454 கோடி. 

வழங்கப்பட்ட கடன்கள் 14% வளர்ச்சி கண்டு செப் 22வில் ₹ 437941 கோடி. இதுசென்ற வருடம் இதுவே ₹385730 கோடி. ராம் (RAM) பிரிவு கண்ட 13% வளர்ச்சி கண்டுள்ளது. (RAM) இதில் சில்லறைக்கடன் 14%, விவசாயம் 15% வளர்ச்சி கண்டுள்ளது. காலாண்டிற்குக் காலாண்டு என்பதாக வரிசைக் கிரமப்படிப் பார்த்தால் வளர்ச்சி 3% ஆகும்.

மொத்த டெபாசிட்டுகள் 7% வளர்ச்சி (ஆ-ஆ) என்பதாக செப் 22வில் ₹ 588860 கோடி. சென்ற ஆண்டு இது ₹551472 கோடி ஆகும். காலாண்டிற்குக் காலாண்டு என்பதாக வரிசைக் கிரமப்படிப் பார்த்தால் வளர்ச்சி 1% ஆகும்.

காசாவின் வளர்ச்சி 7% ஆகும் (ஆ-ஆ எனும் அடிப்படையில்). இது ₹241078 கோடி (செப் 22) மொத்த டெபாசிட்டுகளில் இதன் பங்கு 41% ஆகும்.

முன்னுரிமைக் கடன்கள் செப் 22வில் ₹158187 கோடி இது ஏ என் பி சியில் 48% ஆகும். நிர்ணயிக்கப்பட்ட வரையறை 40% 

வலைப்பின்னலமைப்பு

வங்கிக்கு 5728 உள்நாட்டுக் கிளைகள், இவற்றுள் ஊரகக் கிளைகள் 1940, நகர்ப்புறக் கிளைகள் 1496, 1157 முழுநகரக் கிளைகள், 1135 மெட்ரோ கிளைகள் 3 வெளிநாட்டில் உள்ள கிளைகள்.

ஏ டி எம் கள் மற்றும் பி என் ஏக்கள் 4825. முகவர்கள் 10256 ஆகும்.

 

எங்கள் கவனமும் அதீத ஈடுபாடும்…

டிஜிட்டல் மயமாக்கலின் சகாப்தம் வங்கித் துறையின் தொழில்நுட்ப அணுகுமுறையில் முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வெவ்வேறு மாற்று அலைவரிசைகளின் வழங்குமுறைகளும், அவற்றின் செயலாற்றமும் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றன. PAPL (முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்), ஆன்லைன் KCC புதுப்பித்தல், டிஜிட்டல் வைப்புகளுக்கு எதிரான ஓவர் டிராஃப்ட் (ODAD), டிஜிட்டல் முறையில் முத்ரா கடன், அதன் முதன்மை திட்டத்தின் கீழ் உடனடி நகைக் கடன், போன்ற பல டிஜிட்டல் தயாரிப்புகளை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது- “WAVE”.

(வேர்ல்ட் ஆஃப் அட்வான்ஸ்டு நிகர்னிலை அனுபவங்கள்) உடனடியாக எளிதில் அமலாகும் தடை இல்லாத மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளைப் பூர்த்தி செய்ய இவை பெரிதும் உதவும். ஊடாடும் டாஷ்போர்டுடன் செயல்திறனை அவ்வப்போது மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட புதியதலைமுறை செயல்திறன் மேலாண்மை அமைப்பையும் (PMS) வங்கி உருவாக்கியுள்ளது.