November 22, 2024
  • November 22, 2024
Breaking News
April 12, 2022

இந்தியா தான்சானியா வர்த்தக ஆணையத்தின் வர்த்தக மேடை துவக்க விழா 

By 0 451 Views

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மேடையை இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் சென்னையில் துவக்கியுள்ளது .

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்க அதிகாரிகள் , தூதுவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னை Hyatt Regency- யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நடைபெற்றது .

இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் ( India Tanzania Trade Commission ) மற்றும் இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சிலுடன் ( IATC ) இணைந்து , சென்னை தி – நகரில் இந்திய தான்சானியா வர்த்தக ஆணையத்தின் அலுவலகத்தை திறந்துள்ளது .

இந்த அலுவலகத்தை இந்தியாவுக்கான தான்சானியா உயர் ஆணையர் ஹெச். இ. திருமதி அனிசா கபூஃபி எம்பேகா அவர்கள் திறந்து வைத்தார் .

இந்நிகழ்ச்சியில் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் , தான்சானியா வர்த்தக ஆணையர் – டாக்டர் ஜே ஷ்ரெனிக் நஹர் மற்றும் பிற முக்கிய அரசு அதிகாரிகள் , தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர் .

ஆப்பிரிக்கா ஒரு வளர்ந்து வரும் கண்டமாகும் .

அதில் பலதரப்பு மற்றும் இருதரப்பு வணிக வாய்ப்புகளுக்கு பெரும் வாய்ப்பைக் கொண்ட இடமாக திகழ்கிறது .

டாக்டர் ஜே ஷ்ரெனிக் நஹர் ( தான்சானியா வர்த்தக ஆணையர் ) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா தான்சானியா வர்த்தக ஆணைய அலுவலகம் இந்தியா மற்றும் தான்சானியா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் .

இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் ( ITTC ) அலுவலகம் புது தில்லியில் உள்ள தான்சானிய உயர் ஆணையத்துடன் நேரடியாகச் செயல்பட்டு , இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வாய்ப்புகளை கொண்டு கொண்டு வந்து சேர்க்கும் 

“தான்சானியாவுடனான வர்த்தக உறவுகள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது .

இந்த கூட்டமைப்பு மூலம் ஆப்பிரிக்காவை நெருங்கி வருவதற்கான நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையும் MEA- யின் அணுகுமுறையும் , ஆப்பிரிக்க நாடுகளுடனான நமது ஈடுபாட்டைத் வழக்கமான முறையில் நீடித்திருக்கும் வகையில் உறவுகள் பலப்படுத்தப்படும் .

எங்களின் அபிவிருத்தி கூட்டமைப்புகள் ஆப்பிரிக்க பிராந்தியத்தின் முன்னுரிமைகளை முன் நிறுத்தி வழிநடத்தப்படும் .

மேலும் உள்ளூர் திறன்களை நாங்கள் உருவாக்கி , முடிந்தவரை உள்ளூர் வாய்ப்புகளை உருவாக்குவோம் .

நாங்கள் இந்திய சந்தைக்கு நெருக்கமான வகையில் எங்கள் வர்த்தகத்தை எளிதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுவோம் ” என்று இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் ( IETO ) தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் கூறினார் .

துவக்க விழாவின் போது , “ தான்சானியா ஒரு அழகான நாடு.

விவசாயம் முதல் உள்கட்டமைப்பு வரை , வர்த்தகம் முதல் மருந்துகள் வரை, எங்களிடம் ஏராளமான சிறந்த வணிக வாய்ப்புகள்உள்ளது .

தான்சானியாவுடனான வலுவான தொடர்பை நாங்கள் முன்னெடுக்கிறோம் , மேலும் இரு பிராந்தியங்களுக்கிடையிலான தொடர்பை மேலும் மேம்படுத்தவும் மற்றும் வணிகர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் யோசனையுடன் ” இந்தியா தான்சானியா வர்த்தக கூட்டமைப்பு 2022 ” என்ற ஐம்பது பேர் கொண்ட வணிகக் குழுவை தான்சானியாவிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம் ” , என்று தான்சானியா வர்த்தக ஆணையர் டாக்டர் ஜே ஷ்ரெனிக் நஹர் கூறினார் .

இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் ( ITTC ) விரைவில் 50 பேர் கொண்ட குழுவுடன் தான்சானியாவுக்குச் சென்று , மருத்துவம் & மருந்துத்துறை , உள்கட்டமைப்பு , மின் ஆட்டோமொபைல் , விவசாயம் , முந்திரி , மசாலா , தானியங்கள் வர்த்தகம் , கப்பல் போக்குவரத்து மற்றும் ஃபின்டெக் ஆகிய துறைகளில் பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து , இந்த பிராந்தியத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளனர்.