October 15, 2025
  • October 15, 2025
Breaking News
January 13, 2019

இளையராஜா75 டீசரை வெளியிட்ட 10 ஹீரோக்கள்

By 0 869 Views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தவிருக்கும் மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக  நடை பெற்றது.

அதைத் தொடர்ந்து  டிக்கெட் விற்பனை ‘புக் மை ஷோ’ ஆன்லைனில்  பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.  

பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பிரமாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் ‘இளையராஜா75’ டீசர்கள் பல உருவாக்கப்பட்டன . அதை,நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில்  விஷால், ,கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால் ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் ட்வீட் செய்து பரவசப்படுத்தினார்கள்.இவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று வீடியோ பதிவேற்றம் செய்து ரசிகர்களையும் வரவேற்று பரவசப்படுத்தியுள்ளார்கள். மேலும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இன்னும் பல VIPக்கள் டீசர்களை வெளியிட உள்ளனர்.

பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு  நடனமாடுகிறார்கள். இதை அவர் விழா காண வந்துள்ள ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்கிறார்.

அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடை பெறுகிறது. 

எல்லாம் சரி… உச்ச நட்சத்திரங்கள் இன்னும் உள்ளே வரக் காணோமே..?