August 31, 2025
  • August 31, 2025
Breaking News
March 13, 2019

நிஜ ஹீரோ சிவகார்த்திகேயனா விஜய் தேவரகொண்டாவா?

By 0 1053 Views

இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கியுள்ளது. இந்தப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைத்திருப்பதை இன்று முறையாக அறிவித்தார்கள்.

இந்தப்படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நிற்க… இன்னொரு பக்கம் இதே தினத்தில் தமிழில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்துக்கும் இதே ‘ஹீரோ’ தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடத்திலும் இயக்குகிறார் ஆனந்த் அண்ணாமலை. இவர் பல விருதுகளைப் பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தின் வசனகர்த்தா ஆவார். 

Hero Vijay Devarakonda

Hero Vijay Devarakonda

ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட இரு பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு ஒரே தலைப்பு வைக்கப்பட்டுள்ள விஷயம் கோலிவுட்டில் புருவங்களை உயர்த்தியுள்ளது. இதில் யாராவது ஒருவர் பின் வாங்க வேண்டும்.

ஆனால், இருவருமே பின் வாங்கப்போவதில்லை என்று தெரிகிறது. சிவகார்த்திகேயன் படத்தைப் பொறுத்தவரை இந்த ‘ஹீரோ’ டைட்டிலை இன்னொரு சினிமா நபரிடமிருந்து பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

ஆனந்த் அண்ணாமலை படத்தைப் பொறுத்தவரை இந்த டைட்டிலை சில ஆண்டுகள் முன்னமே பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் புதுப்பித்தும் இருக்கிறார். அது வரும் ஜூன் வரை செல்லுபடியாகும்.

இந்நிலையில் தலைப்பில் வெற்றி பெறுபவரை விட விட்டுக் கொடுப்பவரே நிஜ ஹீரோ என்பது மட்டும் தெளிவு.