January 21, 2025
  • January 21, 2025
Breaking News
March 13, 2019

கார்த்தியின் புதிய பட தொடக்கவிழா வீடியோ இணைப்பு

By 0 1034 Views
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
 
‘கார்த்தி 19’ என்ற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது.
 
அதிகபொருள் செலவில் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ‘ரஷ்மிகா மண்டன்னா’ தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். 
 
பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – சத்யன் சூரியன். இதன் வீடியோவுக்கு கீழே இருக்கும் லிங்க்கை ‘க்ளிக்’ செய்து பார்க்கவும்…

 

https://drive.google.com/a/top10cinema.com/file/d/18Yxt3r45EUGJfG38hIjQyLVhsqnB9PRl/view?usp=drivesdk