April 19, 2025
  • April 19, 2025
Breaking News
December 9, 2018

ஹன்சிகா 50வது படத்துக்கு வரப்போகிறது ஆப்பு

By 0 1130 Views

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு ஹீரோவே 50வது படத்தை முடிப்பது இமாலய சாதனை என்றிருக்க, ஒரு நடிகை 50வது படத்தில் நடிப்பது ஆகப் பெருமைதான். அந்த பெருமைக்குரிய நடிகை ஹன்சிகா மோத்வானி.

அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்ததாலும், பல மொழிப்படங்களில் நடிப்பதாலும் இது சாத்தியப்பட்டது எனலாம். அவரது பொன்விழாப்படமாக அமைவது ‘மஹா’ என்கிற படம். ‘எட்சட்ரா’ வி.மதியழகன் தயாரிப்பில் யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்தப்படத்தில் ஹன்சிகா முதன்மைப்பாத்திரம் ஏற்கிறார்.

maha

maha

நயன்தாரா வழியில் அவரே படத்தின் நாயகன், நாயகி எல்லாமும். அதில் பல வித கெட்டப்புகளிலும் வந்து அசத்தப்போகிறார் என்பது அவரே வெளியிட்டுள்ள ‘மஹா’ படத்தின் முதல்பார்வையில் தெரிகிறது.

ஹன்சிகாவின் இந்த 50வது படம் இசையமைபபளர் ஜிப்ரானுக்கும் 25வது படமாக அமையவிருக்கிறது. இத்தனை சிறப்புகள் கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா புகை பிடிப்பது… அதுவும் புகையை மீறிய போதை வஸ்துவை புகைப்பது போல் அவரது படம் வெளியிடப்படுள்ளது.

அத்துடன் விட்டால் பரவாயில்லை. அதை சாமியாரிணி உடையில் அமர்ந்து பேக்கிரவுண்டில் ஒரு சாமியாரும் அமர்ந்திருக்க, ஒரு காலை ஒருக்களித்து வைத்துக்கொண்டு ‘உக்கா’ அடிப்பது நிச்சயம் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

வழக்கமாக விஜய்யும், தனுஷும் மாறி மாறி இப்படி ஃபர்ஸ்ட் லுக்கில் புகை பிடிப்பதும் சர்ச்சை ஆனதும் அதைத் திரும்பப்பெற்றுக் கொள்வதுமாக இருந்து பரபரப்பைக் கிளப்புவார்கள். இப்போது அவர்கள் வழியில் ஹன்சிகாவும் இப்படி பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்ப இப்படி நடித்டிருக்கிறாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

இந்நேரம் ஆப்பு சீவப்பட்டுக் கொண்டிருக்கும்..!

ரெடி… ஸ்டார்ட்… மீஸிக்..!