June 18, 2025
  • June 18, 2025
Breaking News
July 12, 2019

300+ திரைகளில் வெளியான யோகிபாபுவின் கூர்கா

By 0 741 Views
யோகி பாபு ஹீரோவாக ’டார்லிங்’, ‘100’ வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், ‘4 மங்கிஸ் 
ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கும் ‘கூர்கா’ இன்று வெளியாகியிருக்கிறது.
 
உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் 
ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் 
திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர், 
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
 
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘கூர்கா’ யோகி பாபுவின் 
சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த 
படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம், முன்னணி ஹீரோக்கள் 
படங்களுக்கு நிகராகவும் வெளியாகியிருப்பது ஒட்டு மொத்த கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க 
வைத்திருக்கிறது.
 
இன்று காலை சிறப்பு காட்சியியே ஹவுஸ் புல் ஆனது படக்குழுவினருக்கு புதிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது.
 
படத்தின் டிரைலர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் செய்த விளம்பரமும் மக்களிடம் எளிதில் சென்றடைய வழி வகுத்துள்ளது. 
 
வசூலிலும் ‘கூர்கா’ மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தட்டும்..!.