December 3, 2024
  • December 3, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • வர்த்தகம்
  • ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்திய கிடங்குகளை மாற்றியமைப்பதில் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் முன்னணி
July 18, 2024

ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்திய கிடங்குகளை மாற்றியமைப்பதில் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் முன்னணி

By 0 296 Views

ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய கிடங்குகளை மாற்றியமைப்பதில் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் முன்னணி வகிக்கிறது

தொழில்துறையில் முன்னிலை வகிக்கின்ற வகையில் இன்ட்ராலாஜிஸ்டிக்ஸ் வணிகங்கள் ஏறக்குறைய 30% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன

சென்னை, ஜூலை 17, 2024: சப்ளை செயின் உத்திகள் மற்றும் நடைமுறைகளில் புதுமைக்கான தேவைக்கு வழிவகிக்கின்ற நுகர்வோரியல் வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் சவாலான சாதனைகளை வழங்குவதற்கு ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்ற ஆட்டோமேஷன் தொழில்நுட்பமானது செயல்படுத்துபவராக இருக்கிறது.

சேமிப்பக அமைப்புகளில் 15% CAGR இல் வளருகின்ற வகையில் 50% வருவாயை நுகர்வோர் சார்ந்த தொழில்களான சில்லறை வணிகம் / இ-காம்/ எஃப்எம்சிஜி/ எஃப்&பி மற்றும் கன்ஸ்யூமர் டூரபிள்ஸ் போன்றவற்றின் மூலம் ஈட்டுகின்ற சந்தையில் ஒரு முன்னணியாளராக இருக்கும் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ், பொருட்களைப் பெறுவதில் இருந்து அனுப்புதல் வரையிலான முழுமையான செயல்முறைகளுக்கான அதிநவீன தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் இதை கண்டுணர்கிறது மேலும் இந்த எதிர்பார்ப்புகளை முன்கூட்டியே சீரமைக்கிறது. இந்த வணிகமானது, அதன் வாடிக்கையாளர்களின் மாறிவரும் மற்றும் வளர்ந்து வரும் தேவைகளுக்கு சேவை செய்வதற்கான திறன் விரிவாக்கம் மற்றும் செயல்திறன் மேம்படுத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது.

இந்த நிறுவனம், தீர்வு உண்டாக்குதல் மற்றும் செயல்படுத்தல், தொழில்நுட்பங்கள், உற்பத்தி திறன் மற்றும் கூட்டாளர்களின் ஒரு நெட்வொர்க் மூலம் தொடர்புடைய ஒருங்கிணைப்பு அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு மனித மூலதனத்தில் முதலீடு செய்துள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் நீடித்த உயர் தரநிலைகள் மூலம் செயல்பாட்டுதிறன்/உற்பத்தித்திறனை விரிவுபடுத்துவது மூலம் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

கோத்ரேஜ் & பாய்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள் போக்குவரத்து வணிகங்களில் (மெட்டீரியல் ஹேண்ட்லிங் சொல்யூஷன்ஸ்) வருவாயில் 12-14% பங்களிக்கின்ற வகையில், பொருள் கையாளுதல் தீர்வுகள், (ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ்) சேமிப்பக தீர்வுகள், மற்றும் Koerber (Godrej Koerber) உடனான கூட்டு முயற்சியின் மூலம் உள் போக்குவரத்து தீர்வுகள் ஆகியவை அடங்கும்.

உற்பத்தி, இ- காமெர்ஸ் ஊடுருவல், நுகர்வு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பின் தற்போதைய நவீனமயமாக்கல் ஆகியவற்றில் அதிவேக வளர்ச்சியால் உந்தப்பட்ட இந்த கிடங்குத் துறை மிகப்பெரிய மாற்றத்தின் ஒரு காலகட்டத்தைக் கண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஒட்டுமொத்த வழங்கல் மற்றும் உள்ளீர்ப்பு ஆகிய இரண்டின் அடிப்படையில் கிரேடு-A வேர்ஹவுஸ் சூழலின் பங்களிப்பு 60% ஐத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ், தன்னியக்கமாக்கல், தொழில்நுட்பம் மற்றும் அறிவார்ந்த சேமிப்பகம் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகளை அறிந்திருக்கிறது.

உள் போக்குவரத்து செயல்பாடுகளை தானியக்கமாக்குவதற்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருந்தாலும், அவற்றை தற்போதைய கிடங்கு / தற்போதைய பணிப்பாய்வுகளுடன் ஒருங்கிணைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். திறன் ஆதாயங்களுக்கு அப்பால் விரிவடைவதற்கும் மற்றும் உலகளாவிய இடையூறுகளைத் தாங்கி நிற்கக்கூடிய நீடித்து நிலைத்திருக்கும் போக்குவரத்து நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கும், ஒரு உற்பத்தி சக்தியாக இந்தியாவின் முன்னேற்றத்தை ஆதரிப்பதற்கும் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு உதவ ஒருங்கிணைப்பதில் இந்த வணிகம் முன்னோடியாக உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் விகாஸ் சௌதாஹா, “இந்தியாவில் உள் போக்குவரத்தின் எதிர்காலம் ஆட்டோமேஷன் பற்றியது மட்டுமல்ல; பல்வேறு சந்தைகள் முழுவதிலும் வர்த்தகத்தின் தேவைகளின் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமான, பதிலளிக்கக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவது பற்றியதுமாகும்.

எளிய கன்வேயர்கள் அமைப்புகள் முதல் கோபோட்கள் வரை AI/ML இயக்கப்படும் தொழில்நுட்பங்கள் வரை ஆட்டோமேஷன் மாறுபடும் மற்றும் அதிக செயல்திறன், உற்பத்தித்திறன், துல்லியம் மற்றும் தொலை பயணத்தில் செலவு சேமிப்பு ஆகியவை அடங்கிய அதன் நன்மைகளைப்பற்றி நிறுவனங்கள் உணர்ந்திருப்பதால், அவை இந்த அமைப்புகள்/தொழில்நுட்பங்களை அதிக அளவில் செயல்படுத்தும் மற்றும் முதலீடு செய்யும்.

கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ், வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால சேமிப்புக் கிடங்குத் தேவைகளை ஒரு நுட்பமான புரிதல் செயல்முறை மூலம் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து ஒரு நெகிழ்வான தீர்வு வடிவமைப்பை உருவாக்குவதன் மூலம் இதை உறுதி செய்கிறது.

துறைகள் முழுவதும் கிடங்கு செயல்பாடுகளில் உள்ள ஆழ்ந்த அனுபவம், சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களில் அதிநவீனம் மற்றும் நிறுவனம் கொண்டிருக்கும் இவை அனைத்தையும் திறம்பட ஒருங்கிணைக்கும் திறன் ஆகியவற்றின் காரணமாக இது சாத்தியமாகிறது.”என்று கூறினார்.

இந்தியாவின் முதல் மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் மூலம் இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக அதன் அந்தஸ்தின் மூலம் உந்தப்பட்டு தமிழ்நாடு மாநிலம் லாஜிஸ்டிக்ஸ் இல் ஒரு முன்னணியாளராக உருவாகி வருகிறது. இந்த பொருளாதார வளர்ச்சியானது பயனுள்ள கிடங்குகள் மற்றும் அதிநவீன உளபோக்குவரத்து தீர்வுகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க தேவையை உருவாக்கியுள்ளது. இந்த தேவைக்கு பதிலளிக்கும் வகையில், கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ், சென்னையில் 27 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன உற்பத்தி வசதியுடன் புதுமையான கிடங்கு தீர்வுகளை வழங்குகிறது.

கோத்ரேஜ் & பாய்ஸ் பற்றி:

1897 ஆம் ஆண்டு முதல், கோத்ரேஜ் & பாய்ஸ் நிறுவனம் பல்கூறு பொறியியல், வடிவமைப்பை மையமாகக்கொண்ட கண்டுபிடிப்பு மற்றும் மிக சமீபத்தில், கார்பன்-லைட் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு செய்கிறதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்சார்புக்கு கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது.

அதன் கண்டுபிடிப்புகளில் உலகின் முதல் காப்புரிமை பெற்ற ஸ்பிரிங்லெஸ் லாக் மற்றும் இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டகங்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தட்டச்சுப்பொறிகள் ஆகியவை அடங்கும்.

உலகெங்கிலும் பரவியுள்ள வணிகங்கள் மூலம் அதன் முக்கிய தொழில்துறை திறன்களுடன் விண்வெளி, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கும் இது வழி வகுத்தது.

இன்று, 14 நிறுவப்பட்ட நுகர்வோர், தொழில்துறை மற்றும் வளர்ந்து வரும் வணிகங்களில் ஒரு சந்தை முன்னணி இருப்புடன், கோத்ரேஜ் & பாய்ஸ் இந்தியாவின் விண்வெளிப் பணிகள், சுற்றுச்சுழல் உகந்த ஆற்றல் இலக்குகள், பசுமைக் கட்டுமானம் மற்றும் உள்போக்குவரத்து சூழல் அதோடு கூட தளபாடங்கள், உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் வடிவமைப்பை மையப்படுத்துகின்ற மற்றும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் தீர்வுகள் கொண்ட நுகர்வோரின் வளர்ந்துவரும் அபிலாஷைகளில் தொடர்ந்து முக்கிய பங்களிப்புகளைச் செய்து வருகிறது.

கோத்ரேஜ் நிறுவனம் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கின்ற இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாக இருக்கிறது.