May 14, 2026
  • May 14, 2026
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • சென்னையில் 6000 சதுர அடியில் புதுப்பிக்கப்பட்ட தனது பிரம்மாண்ட விற்பனையகத்தை கோத்ரெஜ் இன்டீரியோ அறிமுகப்படுத்தியுள்ளது..!
May 8, 2026

சென்னையில் 6000 சதுர அடியில் புதுப்பிக்கப்பட்ட தனது பிரம்மாண்ட விற்பனையகத்தை கோத்ரெஜ் இன்டீரியோ அறிமுகப்படுத்தியுள்ளது..!

By 0 52 Views

தென்னிந்தியாவில் 93% மக்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் நேரம் செலவிடுவதற்கே முன்னுரிமை அளிப்பதாக கோத்ரெஜ் இன்டீரியோவின் ‘மொமெண்ட்ஸ் தட் மேட்டர்’ஆய்வு தகவல்..!

2026-27 நிதியாண்டில் தென்னிந்திய சந்தையில் 550 கோடி ரூபாய் வருவாயையும், சென்னையில் 25% சந்தைப் பங்கையும் எட்ட இலக்கு..!

சென்னை 06 மே 2026: ரீடெயில் விற்பனை அனுபவங்களை வழங்குவதற்கும், தலைசிறந்த வடிவமைப்புகளை எளிதில் கிடைக்கச் செய்வதற்குமான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தின் முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான கோத்ரெஜ் இன்டீரியோ (Interio by Godrej), சென்னையில் தனது புதுப்பிக்கப்பட்ட விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது. அத்துடன், நவீன இந்திய நுகர்வோரின் அன்றாட இல்லற அனுபவங்கள் அவர்களது உணர்வுபூர்வமான நல்வாழ்வு, பிணைப்பு மற்றும் வசதிகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராயும் ‘மொமெண்ட்ஸ் தட் மேட்டர்’ (Moments That Matter – MTM) என்ற ஆய்வு அறிக்கையையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுமார் 6000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த விற்பனையகம், நவீன இந்திய வீடுகளுக்கான அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் இடமாகத் திகழ்கிறது. இங்கு படுக்கையறை, வரவேற்பறை மற்றும் உணவருந்தும் அறைக்கான நவீன ரக ஃபர்னிச்சர்ஸ், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய பர்னிச்சர்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்மையான அலங்காரத் துணி வகைகள் (Soft furnishings) என விரிவான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உத்திசார் விரிவாக்கத்தின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் சென்னையில் 40% சந்தைப் பங்கைக் கைப்பற்ற பிராண்ட் இலக்கு வைத்துள்ளது. மேலும், 2027 நிதியாண்டில் சென்னையில் 45 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 65 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 25% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

கோத்ரெஜ் இன்டீரியோ (Interio by Godrej) நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், நுகர்வோர் வணிகப் பிரிவின் தலைவரான டாக்டர் தேவ் நாராயண் சர்க்கார் கூறுகையில், “சென்னை தொடர்ந்து எங்களுக்கு ஒரு வணிக ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக இருந்து வருகிறது. இங்குள்ள நிலையான குடியிருப்புத் தேவையும், புதிய திட்டங்களின் தொடர்ச்சியான அறிமுகங்களும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. கடந்த காலாண்டில் மட்டும் சென்னையில் 5,000-க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்பு யூனிட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிலையான வருமானம் கொண்ட பணியாளர்கள் மற்றும் மேம்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகளால் இந்த வளர்ச்சி வேகம் பெற்றுள்ளது. இதன் விளைவாக, ஒழுங்கமைக்கப்பட்ட (Organised), மாடுலர் மற்றும் முழுமையான வீட்டு உட்புற அலங்கார தீர்வுகளுக்கான (End-to-end home solutions) மும்முரம் அதிகரித்து வருகிறது. மேலும், சென்னை நுகர்வோர் அதிக இடவசதி கொண்ட, நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நீடித்த உழைப்பு கொண்ட செயல்பாட்டு ரீதியிலான இடங்களை (Functional spaces) விரும்புவதை நாங்கள் காண்கிறோம்.”

தொடர்ந்து அவர் கூறுகையில், “மினிமலான நகர்புற லைஃப் ஸ்டைல் மற்றும் மாறிவரும் குடும்பக் கட்டமைப்புகளால், பல பயன்பாடுகளைக் கொண்ட பர்னிச்சர்கள் (Multifunctional furniture), சேமிப்பு வசதிகளுடன் கூடிய தீர்வுகள் மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work-from-home) சூழலுக்கான தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. சமையலறை மற்றும் ஒருங்கிணைந்த உட்புற அலங்காரத் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் எங்களை எளிதில் அணுகும் வசதியை மேம்படுத்துவதிலும், அவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை சிறப்பாக்குவதிலும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.

கோத்ரெஜ் இன்டீரியோ நிறுவனம் சென்னையில் 8 புதிய விற்பனையகங்கள், 45 விநியோகக் கூட்டாளிகள் மற்றும் 250 சில்லறை விற்பனையாளர்களுடன் வலுவான விற்பனை மற்றும் விநியோகக் கட்டமைப்பை நிறுவியுள்ளது. இது சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் விரிவான இருப்பைக் கொண்டுள்ளது. ஹோம் ஸ்டோரேஜ், படுக்கையறை மற்றும் வரவேற்பறை பர்னிச்சர்கள் போன்ற பிரிவுகளில் இந்த பிராண்ட் நிலையான தேவையைக் கண்டு வருகிறது. அதோடு, மாடுலர் கிச்சன்கள் மற்றும் மெத்தைகளுக்கான (Mattresses) வரவேற்பும் அதிகரித்து வருகிறது.

புதிதாக வெளியிடப்பட்ட ‘MTM’ ஆய்வின்படி, தென்னிந்தியாவில் சுமார் 95 சதவீதத்தினர் தங்களின் சொந்தப் படுக்கையில்தான் தங்களால் நிம்மதியாக உறங்க முடிகிறது என்று தெரிவித்துள்ளனர். இது ஓய்வு மற்றும் சௌகரியத்திற்கான முதன்மையான இடமாக வீடுகள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த மனநிலை அன்றாட வழக்கத்திலும் பிரதிபலிக்கிறது; சுமார் 86 சதவீதத்தினர் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் வீட்டிலேயே நிதானமாக நேரத்தைக் கழிக்க விரும்புகின்றனர். இது வீடு சார்ந்த லைஃப்ஸ்டைல் நோக்கிய வலுவான மாற்றத்தை உணர்த்துகிறது. மேலும், அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதும், அன்றைய அனுபவங்களை மாலையில் பகிர்ந்து கொள்வதும் தங்களுக்கு மிகவும் பிடித்தமானது என 93 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தரவுகள் அனைத்தும், தென்னிந்தியாவில் வீடுகள் என்பது வெறும் செயல்பாட்டுக்கான இடமாக மட்டுமில்லாமல், ஓய்வு, பிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் இடமாக மாறி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த ‘MTM’ ஆய்வானது இந்தியா முழுவதும் 2,600-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது..

About Interio by Godrej

Interio by Godrej is India’s leading furniture and design brand for homes and workspaces, from the Godrej Enterprises Group, offering products and solutions that combine style, functionality and durability. It offers a wide-ranging portfolio that spans residential interiors (furniture, soft furnishings, and services) and commercial and institutional environments including offices, schools, hospitals, laboratories, and turnkey AV solutions.

Today, Interio by Godrej enjoys the largest retail footprint across the country with 1000+ retail stores and serves customers both online and offline. It operates five state-of-the-art manufacturing facilities across Mumbai, Khalapur, Haridwar, Shirwal, and Bhagwanpur.

Driven by a passion for innovative and sustainable design, the brand has been recognised with 75+ design awards and has secured 900+ registered designs.