October 16, 2025
  • October 16, 2025
Breaking News
January 24, 2024

நட்புக்காக கிரிக்கெட் விளையாடிய ப்ளூ ஸ்டார் சிங்கப்பூர் சலூன் பட குழு

By 0 279 Views

*புளூஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படக்குழுவினர் நட்புக்காக விளையாடிய கிரிக்கெட்*

இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் இணைந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி தங்களது நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் பா.இரஞ்சித் தலைமையில் புளூஸ்டார் படக்குழுவினரும், நடிகர் ஆர் ஜே பாலாஜியின் தலைமையில் சிங்கப்பூர் சலூன் படக்குழுவினரும் இணைந்து நட்புக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

ஒரே நேரத்தில் எதிரெதிர் படங்களாக வெளியாகும் நேரத்தில் இரண்டு படக்குழுவினரும் நட்பாக கிரிக்கெட் விளையாடுவது தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

இரண்டு படங்களும் வெற்றியடைய படக்குழுவினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

நிகழ்வில் பா. இரஞ்சித், ஆர் ஜே பாலாஜி, அசோக்செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்திபாண்டியன், கிஷன் தாஸ், எடிட்டர் செல்வா, மற்றும் இரண்டு படங்களின் குழுவினரும் கலந்துகொண்டனர்.