August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • கல்வி
  • வர்த்தகம்
  • ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் தனது வெள்ளிவிழாவை கொண்டாடிய கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட்
February 17, 2025

ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் தனது வெள்ளிவிழாவை கொண்டாடிய கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட்

By 0 142 Views

ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் தனது 25-வது வெள்ளிவிழாவை சிறப்பாக கொண்டாடிய கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட்

சென்னை: 17 பிப்ரவரி 2025: ரூ.2000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட், ஃபார்ச்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் அதன் 25-வது வெள்ளி விழா நிகழ்வை பெரும் உற்சாகத்தோடு கொண்டாடியது. 1000-க்கும் அதிகமான கிளைகளுடன் இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் பிராண்டு தூதராக பிரபல திரைப்பட நட்சத்திரம் நயன்தாரா இயங்கி வரும் நிலையில், சென்னை மாநகரின் வலுவான செயலிருப்பை கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடு பிசினஸின் வளர்ச்சிக்கு, சென்னை மாநகர செயல்பாடுகள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  

ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டு நிகழ்வை அமெரிக்காவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதரும், கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் – ன் சேர்மனுமான திரு. T.P. ஸ்ரீனிவாசன், IFS (ஓய்வு) தொடங்கி வைத்தார். இந்நிறுவனத்தின் புரமோட்டரும், செயலாக்க இயக்குனருமான திரு, ஷிபு தேக்கும்புரம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். இந்நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி திரு, மனோஜ் ரவி முன்னிலை வகித்தார். 25 ஆண்டுகள் செயல்பாட்டைக் கொண்டாடுகின்ற வெள்ளி விழா கொண்டாட்டத்தில், தமிழ்நாடெங்கிலுமிருந்து பணியாளர்கள் வெகு ஆர்வத்தோடு பங்கேற்றனர்.  

இந்த ஆண்டு முழுவதும் அனுசரிக்கப்படும் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த பணியாளர் மாநாடு அமைந்தது. நிறுவனத்தின் சிறப்பான கடந்தகால பயணம் குறித்து சிந்திக்கவும் மற்றும் இதன் எதிர்கால வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்கவும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து விவாதிப்பதற்கான ஒரு தளத்தை இம்மாநாடு வழங்கியது.

நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றிக்கு ஒத்துழைப்பு மிக்க பங்காற்றுவதற்கு பணியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நிறுவனத்தின் சாதனைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற இலக்குகள் குறித்து நிறுவனத்தின் மண்டல அளவிலான தலைமை அலுவலர் திரு, ஜுலியஸ் ஜோபர்ட் அருண் மற்றும் பிராந்திய தலைமை அலுவலர்கள் தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

2025-ம் ஆண்டுக்கான இலக்குகளையும், உத்திகளையும் குறித்து இதன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. மனோஜ் ரவி விளக்கமாக எடுத்துரைத்தார். புத்தாக்கம், டிஜிட்டல் நிலைமாற்றம் மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள வளர்ச்சி ஆகிய அம்சங்களை தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.  

பணியாளர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தவும் மற்றும் குழுவாக ஒருங்கிணைந்து செயல்படும் உணர்வை மேலும் வலுவாக்கவும் உதவுவதற்கு ஊக்கம் ஏற்படுத்தும் ஒரு நாள் பயிற்சி அமர்வும் இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது தங்களது தளராத அர்ப்பணிப்பிற்கும், மதிப்பு மிக்க பங்களிப்பிற்கும் நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். பணியாளர்களின் நலவாழ்வு மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கும், பொறுப்புறுதிக்கும் சான்றாக இது திகழ்ந்தது. 

இந்தியா முழுவதிலும் எண்ணற்ற கிளைகளுடன் கூடிய சிறப்பான வலையமைப்பு, வெற்றி சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் பாரம்பரியம் மற்றும் வரவிருக்கும ஆண்டுகளில் முதல் தொடக்க பங்கு வெளியீட்டிற்கான திட்டங்கள் ஆகிய அம்சங்களின் ஆதரவோடு துடிப்பான, மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கி பயணிக்க சிறப்பான திட்டங்களை ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் உருவாக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாடு அமைந்திருக்கிறது.

வெள்ளிவிழா கொண்டாட்டம், 2025 டிசம்பர் மாதத்தில் நிறைவுக்கு வரும். நிறுவனத்தின் தொடர்ச்சியான விரிவாக்கப் பணிகள் மற்றும் வெற்றி சாதனைகளுக்குப் பாதையமைக்கும் விதத்தில் 2030-ம் ஆண்டுக்குள் எட்டப்படும் வளர்ச்சிக்கான Probability கூடிய திட்டம் அப்போது வெளியிடப்படும்.

 

Next Post

Chennai leads the way for PB Partners

February 24, 2025 0