October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்தியில் தடம் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
February 3, 2020

இந்தியில் தடம் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

By 0 607 Views

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.

இந்தியிலும் வெற்றி முரசு கொட்டட்டும்..!

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.