December 2, 2025
  • December 2, 2025
Breaking News
January 4, 2020

சிம்புவை பாராட்டும் உலகின் ஒரே இயக்குநர்

By 0 824 Views

‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வம்பு புகழ் சிம்பு இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“எல்லோரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் ஏற்ரிருந்தாலும், அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானது.

 
ஃபிளாஸ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடிய பெரிய பாத்திரத்தில் வரும் அவர் ஒரு பைலட்டாக நடித்திருக்கிறார். நிஜத்தில் கோவாவில் 30 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பைலட்டுக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவரது பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அவர் வேடத்தை மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி உருவாக்கியுள்ளோம்.
 
படத்தில் அவரது பெயர் ‘ஜமீல்’. என்னுடைய பெயரை விளம்பரப்படுத்தும் பொருட்டு இப்படி வைத்திருக்கிறேன் என தப்பாக நினைத்து விடாதீர்கள். முதலில் அவரது ரோலுக்கு ‘சாஹிப்’ என்று தான் பெயர் வைத்திருந்தோம் ஆனால் அந்தப்பெயர் மிகவும் வழக்கமான பெயராக இருப்பதாக படக்குழு கருதியதால் இந்தப்பெயரை முடிவு செய்தோம் என்றவர் உலகிலேயே முதல்முறையாக சிம்புவின் ஒத்துழைப்பைப் பாராட்டினார்.
 
“இப்படி ஒரு கச்சிதமான நடிகரை நான் பார்த்ததேயில்லை. அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு டேக்கிலும் “இது ஓகேவா, இன்னொரு முறை போகலாமா..?” என எந்த ஒரு அலட்டலும் இன்றி கேட்டுக்கொண்டே இருந்தார்.
 
எப்போது வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு நேரம் தவறாமல் முதல் ஆளாக அங்கு இருந்தார். படப்பிடிப்பில் வெகு சிரத்தையுடன் அமைதியாக இருந்தார். அவரது பங்கு எங்கள் படத்தை மேலும் பல படிகளுக்கு எடுத்து செல்லும்..!” என்றார்.
 
இந்த செய்தியை பத்திரமா ‘சேவ்’ செய்து வச்சுக்கங்க. பின்னால உதவும்..!