January 15, 2025
  • January 15, 2025
Breaking News
December 26, 2018

திடீர் சிக்கலில் அஜித் 59 பட இயக்குநர் வினோத்

By 0 1100 Views

அஜித்தின் 59வது பட இயக்குநராக எச்.வினோத் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பதற்கு முன்னரே அறிவித்தவை பத்திரிகைகள்தான்.

ஆனால், பட  நிறுவனம் அறிவிக்கு முன்னரே தானே பத்திரிகைகளிடம் அறிவித்து விட்டதாக எங்கே பழி வந்து விடுமோ என்று பயந்த வினோத், அவசர அவசரமாக ‘அஜித் பட இயக்குநரை தயாரிப்பாளர்களே விரைவில் அறிவிப்பார்கள்…’ என்று ஒரு ஸ்டேட்மென்ட் விட்டார்.

அதன்படியே கொஞ்ச நாளில் தயாரிப்பாளர்களும் அடுத்து அஜித் எங்களுக்காக நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று அறிவித்தார்கள். எச்.வினோத் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இது ஒருபுறமிருக்க, ரஜினியின் படம் என்றைக்கு புக்கானதோ, சின்ன இயக்குநரான பா.இரஞ்சித் பெரிய இயக்குனரானார். அதேபோல்தான் கார்த்திக் சுப்பராஜும். ரஜினி படம் இயக்கி அது வெளியாகவிருக்கும் நிலையில் அவரும் பெரிய இயக்குநர் பட்டியலில் சேர்ந்து விட்டார்.

இப்போது அந்தப் பட்டியலில் சேரவிருக்கிறார் எச்.வினோத். ஆமாம்… அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்க, அதற்கு அடுத்த ரஜினியின் படத்தை எச்.வினோத் இயக்குவதாக செய்திகள் வருகின்றன.

அஜித் படம் இப்போதுதான் ஆரம்ப நிலையிலிருக்க, ரஜினியின் முருகதாஸ் படம் இன்னும் ஆரம்பிக்காமலிருக்க, அதற்குள் இப்படி செய்தி வலம் வருவது அவருக்கு தர்மசங்கடத்தைத் தந்திருக்கிறது.

விரைவில் வழக்கம்போல் ஒரு ஸ்டேட்மென்ட்டை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்..!