யாரும் எதிர்பார்க்காமல்… யாரையும் எதிர்பார்க்காமல் சமீபத்தில் யோகிபாபு ரகசிய திருமணம் செய்து கொண்டார் அல்லவா?
திருமணம் ரகசியமாக நடந்து விட்டதால் அதற்கான வரவேற்பை இந்த மாதத்தில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் அவர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கி தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள திருநெல்வேலி வந்திருந்தார்.
திருமணம் முடிந்து அவர் வந்ததால் அதைக் கொண்டாடும் விதமாக கேக் ஒன்றுக்கு ஆர்டர் செய்து வைத்திருந்தார்கள். அதனை மாரி செல்வராஜ், தனுஷ் முன்னிலையில் யோகிபாபுவை வைத்து வெட்டச் செய்தார்கள்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலி ஒன்றை எடுத்து யோகிபாபுவின் கழுத்தில் அணிவித்தார் தனுஷ். அதில் யோகிபாபு மட்டுமல்லாமல் படக்குழுவினர் அத்தனைபேரும் அதிசயித்தனர்.
ஆக, தனுஷிடமிருந்து யோகிபாபுவுக்கு முதல் திருமணப் பரிசு கிடைத்துள்ளது. இனி மற்றதெல்லாம் வரவேற்பில்…
Dhanush Gifted Yogibabu