நேற்றே இந்த செய்தி தொடர்பான நம் சந்தேகத்தை வெளியிட்டிருந்தோம். ஜெ பற்றி கௌதம் மேனன் இயக்கும் ‘குயீன்’ தொடர் ஜெயலலிதா பற்றியதாக இருந்தும் தொடர் தரப்பில் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் ‘ஒரு பிரபல அரசியல்வாதியின் கதை’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். அது ஏன்..” என்று.
இன்று அத்ற்கான விளக்கம் கிடைத்து விட்டது. ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இயக்குநர் ஜி.பி.விஜய் முறையாக ஜெவின் அண்ணன் மகன் தீபக்கிடம் அனுமதி பெற்று படமாக்க வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்,
இதனால், அப்படி அனுமதி பெறாமல் இன்னொருவர் அதே கதையை படமாக்க முனைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விஷயம் பற்றி தீபக் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து…
“இயக்குநர் விஜய் மட்டுமே என்னை அணுகி என் அத்தை ஜெயலலிதாவைப் பற்றிய வாழ்க்கையை அவரது புகழுக்குக் களங்கமில்லாமல் படமாக்குவதாக உறுதி சொல்லி அனுமதி பெற்றிருக்கிறார்.
இவ்வேளையில் ஊடகங்களில் ஒரு அரசியல் தலைவரின் வரலாறு என்ற பெயரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க கௌதம் மேனன் இயக்கும் வெப் தொடர் ஒன்றின் செய்திகளைப் பார்த்தேன். அவர் எந்த அரசியல்வாதியைப் படமெடுக்கிறார் என்று தெரியவில்லை.
இதன் மூலம் நான் சொல்லிக்கொள்வது என் அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கையை எங்கள் குடும்ப அனுமதி பெறாமல் யாரும் படமாக்கினால் அதைக் கடுமையாக எதிர் கொள்வோம். அதனால் கௌதம் மேனன் குறிப்பிடும் ‘குயீன்’ யார் என்று தெளிவு படுத்த வேண்டும்..!”
கௌதம் மேனன் தெளிவு படுத்துவாரா..?