October 15, 2025
  • October 15, 2025
Breaking News
June 17, 2021

கொரோனாவுக்கு இன்னொரு தமிழ் நடிகர் பலி

By 0 555 Views

தமிழ் சினிமா தொடர்பில் பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நிதீஷ் வீரா, மாறன், இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி உள்பட சிலர் கொரோனாவுக்கு பலியாகி இறந்தனர்.

இந்நிலையில் தொரட்டி என்னும் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷமன் மித்ரு உயிரிழந்தார்.

இவர் மறைந்த ஒளிப்பதிவாளரும, இயக்குனருமான கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவராம்.

இன்னும் கொரோனா அலை ஓயவில்லையோ..?