October 18, 2026
  • October 18, 2026
Breaking News
November 13, 2021

கோவையில் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுப்பு

By 0 712 Views

கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போராடியவர்கள், ”மாணவி புகார் கொடுத்தும் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மாணவியை மிரட்டி அக்குரூரத்தை மூடிமறைப்பு செய்து மாணவி தற்கொலை செய்ய முக்கிய காரணமாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்படும் வரை மாணவி உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்” என்று தெரிவித்தனர். 

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி புகார் அளித்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவரைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.