குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.
பின்னர் முதலமைச்சர் பேசிய போது வெகுவகமாக நோய்த் தொற்று பரவி வருமவதால் மீண்டும் சென்னையில் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தினார்.
“சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை . கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை மக்கள் தவிர்ப்பது வேதனையளிக்கிறது.
பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். நோய்த்தொற்று யாருக்கு வரும் என்பது குறித்து சொல்ல முடியாது. மருத்துவர்கள் தொடர்ந்து அயராது பணியாற்றி வருகிறார்கள்..!” என்றார் அவர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்டமாக 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 367 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 1342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 6,73,906 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று 16,889 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,42,201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.