October 14, 2025
  • October 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • முதல்வர் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம்
June 27, 2021

முதல்வர் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம்

By 0 571 Views

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். 

அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முதல்வன் படத்தை எடுத்தது மட்டுமல்லாது பிரமாண்ட படங்களை எடுப்பதிலும் முதல்வனாக ஷங்கர் இருப்பதால் அவர் இல்ல திருமணத்தில் தனது பிசியான நிலையிலும் தமிழக முதல்வர் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது..!