சினிமா செய்திகளில் கலக்குவது சிம்புவும், அவரது ரசிகர்களும்தான். அவர் நடித்து பொங்கல் வெளியீடாக வரும் என்று எதிர்பார்த்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பட வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்களுடனான அவரது பிரச்சினையை முடிக்காவிட்டால் ‘ரெட் கார்டு’ போடப்படும் என்ற தகவல் பரவியது. உடனே அவரது ரசிகர்கள் பொங்கியெழுந்து விஷாலுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதும் அவர்களை சிம்பு அமைதிப்...
நல்ல விஷயங்களைத் தவிர்க்காமல் செய் என்பதுதான் ‘செய்’ என்பதற்கான ஒரு வார்த்தை விளக்கம். அப்படி நாயகன் நகுல் இதில் என்ன நல்லது செய்கிறாரென்று பார்ப்போம்… நடிகனாகிறேன் பேர்வழி என்று எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நகுலை வேலைக்குப் போகச்சொல்லி அவர் விரும்பும் நாயகி ‘ஆஞ்சல் முஞ்சால்’ (அட… நாயகி நிஜப்பேரே அதுதாங்க..!)...
விவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் இன்றைய காலநிலைமைக்கேற்ப சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன். இதில்...
‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ள பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு...