ஞானவேல்ராஜா தயாரிப்பில் நார்தன் இயக்கி சிம்பு நடிக்க உருவாகி வரும் கன்னட படத்தின் ரீமேக்கான ‘மஃப்டி’ கைவிடப்படுவதாக நேற்று செய்திகள் வந்தன. 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஶ்ரீமுரளி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் முறையே சிம்பு, கெளதம் கார்த்திக் நடித்து வந்தனர். கன்னடத்தில் இயக்கியதும் இதே நார்தன்தான்....
சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார் இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார்...
வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகள் மூலமாக அறியப்பட்ட கிருஷ்ணமூர்த்தி (வயது 55) கடந்த 07-10-2019 அதிகாலை மாரடைப்பால் காலமானார். அன்று குமுளி அருகே படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள்...
லதா ரஜினிகாந்தின் அக்கா மகளும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான நடிகை மதுவந்தி சமீபத்தில் நாடகம் நடத்துவதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவரது விசா முறையற்று இருப்பதால் கைதானதாகவும், அவரையும், அவருடன் சென்றிருந்த குழுவினரையும் இமிக்ரேஷன் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாகவும் செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து மதுவந்தி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில்...
இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு...
இன்றைய தகவல் தொடர்புச் சாதனங்களின் மூலம் யாரும் யாரையும் எப்போதும் தொடர்பு கொள்ளவும், தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. அந்த வகையில் யு டியூப் சேனல்கள் இன்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் முகம் பார்த்து செய்திகளை அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. இதில் வருமானமும் உண்டு என்று கூடுதல் சிறப்பாக இருக்க,...