கலைஞர்கள் எப்போதுமே உணச்சி வசப்பட்டவர்கள். அதிலும் நல்ல படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு கொஞ்சம் கோபம் அதிகமாகவே இருக்கும். இதில் சேரனும் விதிவிலக்கல்ல.
இவருக்கு தனியார் மீடியா ஒன்று (பிஹைன்ட் உட்ஸ்) தங்கப்பதக்கத்துடன் கூடிய Icon of Inspiration விருதை அளித்தது. திரைப்படக் கலைஞர்களைப் பொறுத்த அளவில் மீடியாக்கள் கொடுக்கும் இதுபோன்ற விருதுகளை மரியாதையுடன் ஏற்பார்கள். அப்படித்தான் சேரனும் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
ஆனால், இந்த விருதை இப்போது திருப்பிக் கொடுத்து விட்டார். என்ன சங்கதி..?
சமீபத்தில் சேரன் நடிப்பில் சாய்ராஜ்குமார் இயக்கிய ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படம் வெளியானது. எப்போதுமே மீடியாக்கள் தன் படம் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய சேரன் விரும்புவார். அப்படி மேற்படி விருது கொடுத்த மீடியாவில் படத்தைப் பற்றிய விமர்சனம் என்னவாக இருக்கும் என்று அறிய ஆசைப்பட்டார். ஆனால், படத்தின் விமர்சனம் அதில் இடம் பெறவில்லை.
எனவே மேற்படி மீடியாவுடன் தொடர்பு கொண்டு சேரன் இது பற்றிக் கேட்க, விமர்சனம் எழுத எங்கள் குழுவால் ஏற்றுக்கொள்ள முடியாத படம் அது…” என்று பதில் வந்திருக்கிறது. அதனால் அது குறித்த தன் வேதனையைத் தெரிவித்த சேரன் எழுதிய செய்தி இது…
Cheran’s Message
Cheran’s Tweet