April 24, 2024
  • April 24, 2024
Breaking News
February 13, 2020

முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்

By 0 578 Views

திரைத்துறையில் நிலவும் வெளியீட்டு சிக்கல் ப்ரச்னை குறித்தும், அதை மாற்றியமைக்க முறையிட்டு வேண்டுகோளும் அறிக்கையும் வெளியிட்டிருக்கும் திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்களையும் திரு. சீமான் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன்.

அதேநேரம் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்கள் உடனடியாக இதற்கு தீர்வுகண்டு அபாய நிலையில் இருக்கும் திரையுலகை காப்பாற்றிட வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அதைப்பற்றி ஆராய ஒரு முக்கிய குழு அமைக்க வேண்டும் எனவும் அதில் கட்டாயம் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

தடம்மாறிகுழம்பிய நிலையில் இருக்கும் விநியோக முறையிலும் திரையரங்க வெளியீட்டு முறையிலும் மாற்றம் அவசியம், விளம்பரம் விமர்சனம் என்ற பெயரில் இங்கு ஒரு கொள்ளையும் சூழ்ச்சியும் நடப்பதை தடுப்பது முக்கியம்,

பெரிய நடிகர்களின் படத்திற்கு வழங்கப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை,சிறிய படங்களை வெளியிடும் திரையரங்க எண்ணிக்கையில் பாரபட்சமின்மை, காட்சிகளை பிரித்துக்கொடுப்பதில் எந்த காட்சி வேண்டுமென படத்தின் தன்மைக்கு ஏற்ப முடிவெடுக்கும் உரிமை தயாரிப்பாளருக்கு கொடுக்கப்படுதல் போன்றவற்றில் முக்கிய மாற்றங்கள் அரசு கொண்டுவர முயலவேண்டும்.

அதேபோல பார்வையாளர்களின் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதும் ஒரு பெரும்குறை. சிறிய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்படவேண்டும்.. எல்லோரும் வரி கட்டுகிறோம்..

எனவே எல்லோரும் பிழைப்பதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டியது வரிவசூல் செய்யும் அரசின் கடமையாகும்..!