Cheran Met Mahumitha
பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல. இருந்தாலும் சேரன் போன்றவர்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள். அதன் சூட்சுமம் புரியாமல் அல்லது பணத்துக்காக சேரன் போன்றோரும் அதில் சிக்கி தங்கள் மரியாதையை இழந்து வருகிறார்கள்.
இது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட முறையில் சேரன் எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த… உலகறிந்த விஷயம். அந்த ஷோவில் உருப்படியாக கலந்து கொண்டு நல்ல பெயருடன் வெளிவந்த அவர், அதன்பிறகும் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்களைச் சந்தித்து ஒரு குடும்பத்தின் தந்தை போலவே நடந்து கொண்டு வருகிறார்.
அதன் ஒரு நீட்சியாக நேற்று நடிகை மதுமிதாவின் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். ஏற்கனவே ‘பிக்பாஸ்3’ நிகழ்வில் மன அழுத்தத்துக்கு உட்பட்டு தற்கொலை முயற்சி வரை போனவர் மதுமிதா.
Cheran Met Mahumitha 2
இப்போது அவர் அதிலிருந்து மீண்டுவிட்டாரா, நல்ல மன நிலையில் இருக்கிறாரா என்றறிய அவரைச் சந்தித்து விசாரித்து விட்டு வந்திருகிறார் சேரன்.
அவர் வருவதை அறிந்து மகிழ்ந்த மதுமிதா, அவருக்குத் தங்கள் வீட்டிலேயே மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்ய, அவர்கள் குடும்பத்துடன் உணவருந்தி விட்டு புகைப்படங்கள் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் சேரன்.
சினிமாவிலும் விட்டதைப் பிடிக்கட்டும் சேரப்பா..!