November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்பட விமர்சனம்

by by Dec 31, 2023 0

ஆவிகளை வைத்துக் காமெடி படங்கள் எடுக்கப்படும் ட்ரெண்டில் முந்தி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் பிந்தி வந்திருப்பதில் தலைப்பைப் போலவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நிலை பெற்றிருக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் காட்டி முடிக்கிறார்கள்.

அதன் பின்னர் தற்போதைய நிகழ்வில் சத்தியமூர்த்தி, கோபி, சுதாகர் மற்றும் தனது நண்பர்களுடன் வசித்து வர. அவர்களில் இரண்டு பேர் இயக்குனர் ஆக முயற்சி செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் யாஷிகா ஆனந்த்தும், ஹரிஜாவும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read More

வட்டார வழக்கு திரைப்பட விமர்சனம்

by by Dec 29, 2023 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 80 களின் இறுதியில் நடக்கும் கதை.

அங்கே ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இரு பங்காளிக் குடும்பங்களுக்குள் வருடக் கணக்காக பகை இருந்து வருகிறது. அதுதான் களம். ஆனால், ஒரு காதல் கதையாக படம் நிறைவு பெறுகிறது.

படத்தின் தலைப்புக்கு நியாயம் சேர்ப்பது போல், மதுரை மண்ணின் வட்டார வழக்கு அற்புதமாக படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இதுவரை எவ்வளவோ படங்களை மதுரை வட்டார வழக்கில் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த அளவுக்குத் துல்லியமாக எந்தப் படத்திலும்…

Read More

மதிமாறன் திரைப்பட விமர்சனம்

by by Dec 28, 2023 0

உருவக்கேலி செய்வது பொதுவான மனிதர்களின் இயல்பு. ஆனால் அங்கத்தைப் பார்க்காதீர்கள்… அவர்களின் அறிவைப் பாருங்கள் என்று அடித்துச் சொல்ல வருகிற படம்.

அதற்கேற்றாற் போல் மூன்றே அடி உயரம் உடைய கதாநாயகனை வைத்து முழு படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். 

தென் தமிழ் மாவட்டத்தில் நடக்கிற கதை. அங்கே தபால்காரராக இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவருக்குப் பிறக்கும் இரண்டு குழந்தைகளில் பெண் குழந்தை இயல்பான உயரத்துடன் வளர, ஆண் குழந்தை மட்டும் குள்ளமாகவே வளர (?) அது தொடர்பான…

Read More

நந்திவர்மன் திரைப்பட விமர்சனம்

by by Dec 28, 2023 0

தமிழ்நாட்டின் செஞ்சி பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் ஒருவர் புதையலைத் தேடி வர மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இப்படி ஆரம்பிக்கிறது படம்.

அவரைக் கொன்ற ஆயுதம் எது என்று தடயவியல் துறையாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அகழ்வாராய்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரியான நிழல்கள் ரவி,  அகழ்வாராய்சியாளர் போஸ் வெங்கட் தலைமையில் ஒரு மாணவர் குழுவை அந்த இடத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கிறது.

இரவில் அந்த ஊர் மக்கள் அந்தப் பகுதியில் நடமாடுவதைத் தவிர்த்து வந்திருக்க, ஒருவர் கொலையும் செய்யப்பட்ட நிலையில்…

Read More

மூத்தகுடி திரைப்பட விமர்சனம்

by by Dec 27, 2023 0

அந்த ஊரின் பெயரே ‘மூத்த குடி’ என்கிறார்கள். அந்த ஊரின் ‘மூத்த குடி’யாக கே. ஆர். விஜயாவும், அவரது தம்பி ‘யார் கண்ணனு’ம் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுக்கு அந்த ஊர் மக்கள் எல்லாம்  கட்டுப்படுகிறார்கள்.

ஊருக்கு ஊர் அரசாங்கமே மதுபானக்கடைகளைத் திறந்து நடத்தும் இந்தக் காலகட்டத்தில் தொடங்குகிறது கதை. தங்களது ஊருக்குள் மதுபானக் கடை திறக்கப்பட கூடாது என்று ஊர்மக்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கிறார் சரக்குட்டி என்கிற பெரியவர். ( அவர் பெயரிலேயே சரக்கு இருக்கிறதே என்று…

Read More

மூன்றாம் மனிதன் திரைப்பட விமர்சனம்

by by Dec 26, 2023 0

உலகில் உள்ள எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி உறவுதான் மிகப் பெரியது. அது சரியாக அமையாவிட்டால் இரண்டுபேர் இணைந்த வாழ்வில் மூன்றாம் மனிதன் நுழைந்து விடுவான் என்ற உண்மையைச் சொல்லும் படம்.

அதை ஒரு மர்டர் த்ரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்தேவ்.

பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல்வனாக ஒரு மாணவன் வர, அதைக் கண்ணுறும் காவல் அதிகாரி கே பாக்யராஜ் தன் நினைவுகளை பின்னோக்கி சுழற்ற திரையில் இந்தக் கதை விரிகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரிஷிகாந்த்…

Read More

சபா நாயகன் திரைப்பட விமர்சனம்

by by Dec 23, 2023 0

திரும்பிய பக்கம் எல்லாம் காதல் சிதறும் படம். நாயகன் அசோக் செல்வனுக்கு இந்தப் படத்தில் அத்தனை காதல்கள் வருகின்றன. எது உண்மை, எது எல்லாம் பொய் என்று தெரியாத அளவுக்கு இனிமையாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சி.எஸ். கார்த்திகேயன்.

ஆனால் திரைக்கதை இவ்வளவு எளிதானதாக இல்லை. கோயம்புத்தூரைச் சுற்றி நடக்கும் கதையில் ஒரு இரவில் போதையில் வரும் அசோக் செல்வனை ரோந்து வரும் இன்ஸ்பெக்டர் மைக்கேல் தங்கதுரை தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்.

போகும் வழியில்…

Read More

ஜிகிரி தோஸ்த் திரைப்பட விமர்சனம்

by by Dec 23, 2023 0

நட்பைப் போற்றும் கதை. ஆனால் நாசூக்காகப் போற்றி இருக்கிறார்கள்.

ஷாரிக் ஹாசன், அரண், ஆஷிக் மூவரும் இணைபிரியாத நண்பர்கள். எந்த அளவுக்கு என்றால் ஷாரிக்கின் காதலி அம்மு அபிராமி, இனிமேல் அவர் நண்பர்களை சந்திக்கவே கூடாதென்று சத்தியம் வாங்க, அடுத்த நொடியே ஆஷிக்கிடமிருந்து போன் வர, ‘எஸ்’ ஆகிறார் ஷாரிக் – அந்த அளவுக்கு மலர்ந்த நட்பூ..!

நண்பர்களில் அரண் கொஞ்சம் படிப்பாளி பிளஸ் புத்திசாலி. அவர் டெரெரிஸ்ட் ட்ரேக்கர் என்ற கருவியைக் கண்டு பிடிக்கிறார். அதை வைத்து…

Read More

சலார் 1- சீஸ்ஃபயர் திரைப்பட விமர்சனம்

by by Dec 23, 2023 0

நடக்காத ஒன்றை நடந்ததாக நம்ப வைப்பதுதான் சினிமா. ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல், இல்லாத ஒரு தேசத்தையும், இல்லாத மனிதர்களையும் இருப்பதாகக் காட்டுவதில் பலே கில்லாடி. 

அப்படித்தான் கேஜிஎப்- இல் இந்தியாவையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருக்கும் கொடூர வில்லன்களைக் காட்டினார். 

இந்தப் படத்தில் அதேபோல் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்த கான்சார் என்ற தேசத்தை காட்டுகிறார். அதில் இருக்கும் மூன்று பிரிவுகள் இந்தியாவையே கைக்குள் வைக்கக்கூடிய அளவுக்கு சக்தி பெற்றவையாம். அங்கு நடக்கிற அரசியல் சூழ்ச்சிகள் இந்தியாவுக்குள் எப்படியெல்லாம்…

Read More

ஆயிரம் பொற்காசுகள் திரைப்பட விமர்சனம்

by by Dec 22, 2023 0

வீட்டின் அருகே குழி தோண்டும் போது திடீரென்று அதில் பொற்காசுகள் நிறைந்த புதையல் கிடைத்தால் எப்படி இருக்கும்..? படத்தின் கதை அதுதான் – படமும் அப்படியேதான்..!

ஏதோ ஒரு மீடியம் பட்ஜெட் படம் என்றுதான் பார்க்க உட்காருகிறோம். ஆனால் அதில் தங்கப் புதையலாய் அடுத்தடுத்து நகைச்சுவை வெடிகள் வெடிக்க ஆரம்பிக்கும் போது நம்மையும் அறியாமல் படத்துக்குள் லயிக்க ஆரம்பத்து விடுகிறோம்..!

அதுவும் காமெடி என்றால் அச்சு பிச்சு காமெடி எல்லாம் இல்லை. நியாயமான… இதுவரை படங்களில் அதிகம் வராத…

Read More