September 15, 2026
  • September 15, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

பவுடர் திரைப்பட விமர்சனம்

by by Nov 28, 2022 0

பவுடர் என்பது முகத்தின் மேல் ஒப்பனைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பூச்சு. அதுவே நிஜ முகம் அல்ல. ஆனால் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயம் ஒருவரது முகமே அவர்களது அகத்துக்கான பவுடர் பூச்சு என்பதுதான்.

உள்ளொன்று நினைக்க புறமொன்று செய்யும் வேடதாரி மனிதர்களை தோலுரித்துக் காட்டும் படம் இது.

ஒரே இரவுக்குள் நடக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒன்றோடு ஒன்று எப்படி பின்னிப் பிணைந்து கிடைக்கின்றன என்பதுதான் இயக்குனர் மேற்கொண்டிருக்கும் சவால்.

ஒரு கதை இழையில்,…

Read More

காரி திரைப்பட விமர்சனம்

by by Nov 24, 2022 0

காரி என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்..? கடையெழு வள்ளல்களின் பெயர்களில் ஒன்றாக அது இருக்க, படம் அது சம்பந்தப்பட்டதோ என்றுதான் நினைக்க தோன்றியது.

ஆனால் படத்தில் சொல்லப்படும் காரி, ஜல்லிக்கட்டு காளை வகையை சேர்ந்தது. மிகவும் அரிதான அந்த வகைக் காளைகளை ஜல்லிக்கட்டில் பிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய மான விளையாட்டு என்பதோடு நின்று விடாமல் அதன் மூலம் இரண்டு ஊர்களுக்குள் எப்படியான உடன்பாடு இருக்கிறது என்கிற நடைமுறை உண்மையும், ஜல்லிக்கட்டு காளைகளை…

Read More

கலகத் தலைவன் திரைப்பட விமர்சனம்

by by Nov 19, 2022 0

கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்காத இடங்கள் எதுவும் இல்லை என்று ஆகி விட்ட சூழலில் சினிமாவிலும் அவர்கள் வேரூன்றி விட, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களையே எதிர்த்து ஒரு படம் உருவாக்குவது என்பது பெரிய ‘ தில்..!’

அந்த ‘ தில் ‘ இயக்குனர் மகிழ்திருமேனிக்கு வந்திருப்பது பெரிய விஷயம் இல்லை.  ஆனால் கார்ப்பரேட் ‘ நிதி ‘ ஆதாரம் இல்லாத எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் இந்த முயற்சியில் ஆளும் கட்சியில் அங்கம்…

Read More

செஞ்சி திரைப்பட விமர்சனம்

by by Nov 18, 2022 0

ஆங்கிலத்தில் அடிக்கடி புதையல் வேட்டைக் கதைகள் வெளியாகும். ஆனால் தமிழில் அப்படி இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க (!)  களம் இறங்கி இருக்கிறார் கணேஷ் சந்திரசேகர்.

அவரே கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்தும் இருக்கிறார். அத்துடன் அவருடன் ரஷ்ய நடிகை கெசன்யா நடித்திருக்கிறார். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி இருக்க, ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.

கதை இதுதான்…

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் கெசன்யா தனது மூதாதையர் வீட்டை அடைகிறார். அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள்…

Read More

முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் மலையாள திரைப்பட விமர்சனம்

by by Nov 12, 2022 0

வித்தியாசமான கதைக் களங்களுக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்களே முன்னிலை வைக்கின்றன. அதற்கு ஆங்கிலப் படங்களை தழுவி எடுக்கும் உத்தியும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் அப்படித் தழுவி எடுத்தாலும் அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் எடுப்பதில் கேரளப் படவுலகினர் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள்.

அதன்படி, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் எந்த தவறும் செய்யலாம் என்கிற சுயநல எண்ணம் கொண்ட ஒருவன் வாழ்வில் உயரும் கதை இது.

அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித்…

Read More

மிரள் திரைப்பட விமர்சனம்

by by Nov 12, 2022 0

தலைப்பிலேயே நம்மை படத்துக்கு தயார்படுத்தி விடுகிறார் இயக்குனர் சக்திவேல்.

படம் தொடங்கியதுமே பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைக்கிறது. அதேபோல் அவரது கணவரும் படத்தின் நாயகனுமான பரத்தும் ஏதோ ஒரு  சிக்கலில் இருப்பது அவர் பேசும் தொலைபேசித் தகவலில் இருந்து தெரிகிறது.

இருவரும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள் என்பதும் நமக்கு புரிய வர எல்லா பிரச்சனைகளிலும் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு தங்கள் மகன்…

Read More

யசோதா திரைப்பட விமர்சனம்

by by Nov 11, 2022 0

புராணம் தெரிந்தவர்கள் யசோதா என்ற பெயரைக் கேட்டால் இன்னொருவர் குழந்தைக்குத் தாயானவள் என்று புரியும். இந்த டைட்டிலை விட வேறு எந்த டைட்டிலும் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை.

சமீப காலத்தில் பெரிதும் செய்திக்கு உள்ளாகும் வாடகைத்தாய் விஷயம்தான் படத்தின் ‘ கரு ‘.

குழந்தை இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வரலட்சுமி சரத்குமார் நடத்தும் ஒரு தனியார் மருத்துவமனை ரகசியமாக இப்படி வாடகைத் தாயாக விரும்பும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை தருகிறது….

Read More

பரோல் திரைப்பட விமர்சனம்

by by Nov 10, 2022 0

சினிமாவில் காட்டப்படும் வடசென்னை கதைகளை பார்த்தால் சென்னையில் வாழ்பவர்களுக்கே அடி வயிற்றில் ஒரு பந்து உருளும் என்றால் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வடசென்னையை எப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

வெற்றிமாறன் தொடங்கி மற்ற மாறன்கள் வரை வடசென்னையை வகை வகையாகப் பிரித்து தமிழ் சினிமாவில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் ‘ கான்செப்ட் ‘ அளவில் பாசிட்டிவ் அப்ரோச் படமாக இதைக் கொள்ளலாம்.

வடசென்னை என்றாலே கொள்ளை, கொலை, வஞ்சகம், சூழ்ச்சி என்று காட்டப்படும் நிலையில் இந்தப் பட…

Read More

லவ் டுடே திரைப்பட விமர்சனம்

by by Nov 5, 2022 0

காதலின் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே என்று அழுத்தமாகச் சொல்ல ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குனரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன்.

கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். பிரதீப்பும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். அதற்கு முன் பின் எதுவும் இல்லாமல் ‘ ஹாப் வே ஓபனிங்’கில் தொடங்கும் படம்.

ஆனால், காதலுக்கு வில்லனாகும் இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரையும் சோதிக்க ஒரு உபாயம் செய்கிறார். இருவரும் அவர்களது கைப்பேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளும் படியும், அதற்குப் பிறகும் அவர்களுக்கு திருமணம்…

Read More

காபி வித் காதல் திரைப்பட விமர்சனம்

by by Nov 5, 2022 0

இயக்குனர் சுந்தர்.சி எதற்காக இந்த தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை ஆனால் காபி சாப்பிடுவதைப் போல காதலை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார்.

சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி தலையிட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பவராக இருக்கிறார்.

இவர்களில் ஸ்ரீகாந்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் நவீன சிந்தனை உடையவரான அவருக்கு மனைவி மேல் ஈர்ப்பு இல்லாமல் வெளியே மனம் மேய்ந்தபடி…

Read More