August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

ஏஸ் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2025 0

விஜய் சேதுபதியைப் பார்த்து கொஞ்ச நாள் ஆகிறதே என்று நினைப்பவர்களுக்கு என்றே பளிச்சென்று கம்பேக் தந்திருக்கிறார் அவர்.

அவரை மட்டுமே மனதில் வைத்து இயக்குனர் ஆறுமுககுமார் எழுதிய கதை போல் இருக்கிறது. 

விஜய் சேதுபதியின் கண்களே பல கதைகள் பேசும். அதில் எது நிஜம், எது பொய் என்றெல்லாம நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது அதை உள்ளடக்கி கமர்சியல் வேல்யூவுடன் கலந்த கதை இது. 

சிறையில் இருந்து வெளியே வரும் விஜய் சேதுபதி பிழைப்புக்காக மலேசியா வருகிறார். வந்த இடத்தில் (தொழிலதிபர்..?)…

Read More

ஸ்கூல் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2025 0

ஏற்கனவே சினிமாவை ஆவிகள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க, அதில் ஒரு வித்தியாசமாக இதில் ஆவிகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கிறார் ஒரு மந்திரவாதி. 

அதுவும் இரண்டு மாணவ, மாணவியின் ஆவியை வைத்துக்கொண்டு அவர்கள் படித்த பள்ளியின் மேலேயே ஏவி விடுகிறார். அது எதற்காக… அந்த ஆபத்திலிருந்து பள்ளி மீண்டதா என்பதெல்லாம் மீதிக் கதை.

பாக்ஸ் பகவதி பெருமாள் முதல்வராக இருக்கும் தனியார் பள்ளி, தகுதி அடிப்படையில் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் பெறுகிறது. அதை முதலிடத்திற்கு கொண்டு வரச் சொல்லி பள்ளியின்…

Read More

ஆக கடவன திரைப்பட விமர்சனம்

by by May 23, 2025 0

சிறிய லைனை வைத்துக்கொண்டு அதை வலிய திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யப் படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் தர்மா.

நம்மைப் படைத்த இந்தப் பிரபஞ்சம் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது – நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்தான் நம் வாழ்க்கைக்கான விளைவுகளை ஏற்படுத்துக்கிறது என்பதுதான் அந்த லைன்.

மருந்துக் கடையில் வேலை பார்க்கும் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், ராகுல் மூவருக்கும் சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைக்க வேண்டும் என்கிற கனவு வர, அதற்காக சேர்த்த பணம் களவு போகிறது.

கடன் வாங்கிய…

Read More

மாமன் திரைப்பட விமர்சனம்

by by May 17, 2025 0

தலைப்பே பாதி கதையைச் சொல்லிவிட்டது. அக்கா சுவாசிகா மீது உயிரையே வைத்திருக்கிறார் தம்பியாக வரும் நாயகன் சூரி. 

திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் சுவாசிகாவுக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதால் அவர் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாகி, ஒரு வழியாகக் கருவுறுகிறார். 

அவருக்கு ஆண் குழந்தை பிறக்க… தாய் மாமன் ஆகும் சூரி அந்த குழந்தையுடன் பிரிக்க இயலாத பாசப்பிணைப்பில் கட்டுண்டு கிடக்க அதுவே ஒரு கட்டத்தில் பிரச்சனை ஆகிறது. 

இந்நிலையில் சுவாசிகாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஐஸ்வர்யா…

Read More

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட விமர்சனம்

by by May 17, 2025 0

சினிமா விமர்சனங்களால் சந்தானமும் இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்தும் எவ்வளவு காண்டாகி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கும் படம். அதை கொஞ்சம் பேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார்கள்

அந்த விஷயத்தையே கருப்பொருளாக எடுத்துக்கொண்டு சந்தானமும் இதில் விமர்சனம் செய்யும் யூடியூபர் ஆகி இருக்கிறார். 

இவரைப் போன்ற சினிமாவை கிழி கிழி என்று கிழிக்கும் விமர்சகர்களை ஒரு மர்ம அழைப்பு அனாமதேய தியேட்டருக்கு அழைக்கிறது. அங்கே சென்றவர்களை பாடாய்ப் படுத்தி  போட்டுத் தள்ளுகிறது. 

அதன்படியே சந்தானம் குடும்பத்திற்கும் அழைப்பு வர சந்தானம் ஆபத்தைப்…

Read More

ஜோரா கைய தட்டுங்க திரைப்பட விமர்சனம்

by by May 16, 2025 0

வழக்கமாக காமெடி படங்களிலேயே சீரியஸாக நடித்து வரும் யோகி பாபு உண்மையிலேயே சீரியஸாக நடித்திருக்கும் படம் இது. 

காலம் சென்ற அப்பா பிரபல மேஜிக் கலைஞராக இருக்க அவரைப் போலவே புகழப்பட வேண்டும் என்கிற நோக்கில் தானும் மேஜிக் கலைஞராக வர ஆசைப்படுகிறார் யோகி பாபு. 

ஆனால் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு தவறு ஏற்பட்ட விட அதன் காரணமாக மக்களாலும் போலீசாலும் அடித்து விரட்டப்படுகிறார். போதாக்குறைக்கு அவர் வனப்பகுதியில் தங்கி இருக்கும் ஆளரவமற்ற இடத்தில் பக்கத்தில்…

Read More

லெவன் திரைப்பட விமர்சனம்

by by May 15, 2025 0

சமீப காலமாகவே தொடர் கொலைகள் நடப்பதும், அதைச் செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதுமான கதைகள் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆன இந்தப் படத்தில் என்ன புதுமை என்பதைப் பார்க்கலாம்.

வங்கிக் கொள்ளை ஒன்றில் திறமையாக துப்பறிந்த இணை கமிஷனருக்கு அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலை கேஸை துப்பறிய உத்தரவிடுகிறார் போலீஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன். 

ஒரே மாதிரியாக ஒருவரைக் கொன்று அடையாளம் தெரியாமல் ஏரிக்கும் அந்தக் கேஸ் போலீசுக்கு சவாலாக இருப்பதுடன்…

Read More

நிழற்குடை திரைப்பட விமர்சனம்

by by May 10, 2025 0

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை நெருக்கடிகளால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தன்னைப் பெற்ற பெற்றோரயும், தான் பெற்ற குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது தான். 

வாழ்வின் ஆசைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது இன்னொருவர் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சிவா ஆறுமுகம்.

முதலமைச்சரின் விருது பெறும் அளவுக்கு முதியோர் இல்லம் ஒன்றைத்…

Read More

கீனோ திரைப்பட விமர்சனம்

by by May 9, 2025 0

கந்தர்வா என்ற பதின் பருவத்தைத் தொட்ட சிறுவன்தான் கதை நாயகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகாதாரா பகவத் அவனுக்குத் தந்தையாகவும், வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிடும் ரேணு சதீஷ் தாயாகவும் வருகிறார்கள்.

ஆக, அடிக்கடி தனிமைப்பட்டுவிடும் சாத்தியம் கந்தர்வாவுக்கு வாய்க்கிறது அதிலும் அவர் தனிமையில் இருக்கும் நேரங்களில் இருட்டில் கீனோ என்ற உருவம் அவர் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. 

கந்தர்வாவை அழைப்பதும், தன்னை அணைத்துக் கொள்ளச் சொல்வதுமாக அந்த உருவம் தொடர்ந்து நச்சரிக்க, அதை எதிர்கொள்ள முடியாமல் அச்சம்…

Read More

என் காதலே திரைப்பட விமர்சனம்

by by May 7, 2025 0

‘மேல்நாட்டு மருமகள்’ பட காலத்தில் இருந்து அவ்வப்போது இதுபோன்று வெளிநாட்டில் இருந்து தமிழ நாடு வரும் நாயகி இங்கிருக்கும் நாயகன் மேல் காதல் கொண்டு அவரைக் கைப்பிடிக்க ஆசைப்படும் கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அப்படி நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் அப்படி ஒரு கதையைத் தேர்வு செய்திருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயலட்சுமி. 

காரைக்கால் பகுதியில் ஒரு மீனவ குப்பத்தில் நடைபெறுகிறது கதை. 

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள நாயகி லியா உள்ளிட்ட ஒரு குழு அங்கு…

Read More