August 29, 2025
  • August 29, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது திரைப்பட விமர்சனம்

by by Aug 29, 2025 0

இந்த தலைப்புக்கும் இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்கும்  இப்படி ஒரு தொடர்பு இருக்கும் என்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது. 

மண்டையில் முடி இல்லாதவர்களை சொட்டை என்று கொச்சையாக கூறுவோம். அந்த சொட்டையைப் பற்றிய கதைதான் இது.

வசதியான வீட்டு பையன்தான் என்றாலும் நாயகன் நிஷாந்த் ரூஷோவுக்கு இந்த வழுக்கை தலை பிரச்சனை, தலையாய பிரச்சனையாகி விடுகிறது. இந்த காரணத்தினால் எந்த பெண்ணும் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. 

இவரது அப்பாவும் சிறு வயதிலேயே வழுக்கை விழுந்தவர்….

Read More

கடுக்கா திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2025 0

கடுக்காய் என்றால் அது ஒரு வகைக் காயைக் குறிக்கும். கடுக்கா என்றால்..? யாரோ யாருக்கோ ‘கடுக்கா’ கொடுக்கிறார்கள் அதாவது ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.

இந்த தலைப்பிலேயே கதையும், அதுவும் இது காமெடி கலந்த கதை என்பதும் புரிந்து விடுகிறது. 

திருப்பூருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் நாயகன் விஜய் கௌரிஷ் காலையில் எழுந்து நன்றாக உடை அணிந்து கொண்டு பஸ் ஸ்டாண்டில் வந்து நின்று விடுவார். ஏதோ வேலை வெட்டிக்கு போகிறார் என்று நினைத்து விட வேண்டாம். 

அவரது தினசரி வேலையே…

Read More

வீர வணக்கம் திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2025 0

1940 களில் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்த முன்னோடியான பி.கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை சிற்சில சினிமாவுக்கான கற்பனைகளுடன் தந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவும் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது இங்கிருக்கும் ஜமீன்கள் ஏழைத் தொழிலாளிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காத கிருஷ்ணப் பிள்ளை, பாட்டாளிகளின் விடுதலைக்காக போராடுவதுதான் இந்தப் படம்.

இந்திய விடுதலைக்கு முன் நடந்த இந்தப் போராட்டக் கதையை அதன் ஒரே நேரடி சாட்சியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  96 வயதான புரட்சி பாடகி பி.கே.மேதினி…

Read More

நறுவீ திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2025 0

கல்வியையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் படம். ஆனால் அதை ஒரு திரில்லராக சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம்.

கல்வி தொடங்கி கதை ஆரம்பிக்கவில்லை. ஆனால் காட்டுக்குள் கதை ஆரம்பிக்கிறது. வனத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளின் தொன்மை நம்பிக்கைகளைச் சொல்லி படம் தொடங்குகிறது. 

இன்னொரு பக்கம் நகரில் மிகப்பெரிய காபித் தூள் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அந்த மலைப்பகுதியில் காபி பயிரிடும் தோட்டங்களை அதிகரிக்க எண்ணுகிறது. 

அதற்கான பணிகளுக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் குழு காட்டுக்குள் பயணிக்கிறது….

Read More

இந்திரா திரைப்பட விமர்சனம்

by by Aug 21, 2025 0

பெண் பெயரில் தலைப்பு கொண்ட படமாக இருப்பதால் இது ஒரு பெண்ணைச் சுற்றிய கதையமைப்பைக் கொண்டிருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 

நாயகன் வசந்த் ரவிதான் ஹீரோ. அவர்தான் இந்திரா. இப்படி தலைப்பிலேயே ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கும் இயக்குனர் படம் முழுவதும் அப்படியே பல திருப்பங்களை வைத்து இந்த திரில்லரைத் தந்திருக்கிறார். 

கதைப்படி அபிமன்யு என்ற சீரியல் கில்லர்  அங்கங்கே கொலைகளைச் செய்து நகரை நடுங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கொலை செய்யும் ஸ்டைலே அலாதியானது ஒருவரை கொன்ற…

Read More

கூலி திரைப்பட விமர்சனம்

by by Aug 14, 2025 0

ரஜினி படம் என்கிற பிராண்ட் ஒன்று போதும்… அதற்குள் என்ன கதையையும் வைக்கலாம் – என்ன தலைப்பு வைத்தும் கதை சொல்லலாம். 

அப்படி லாஜிக் எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு கொலையுண்ட தன் நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க புறப்படுகிறார் ரஜினி.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அவர் தன்னுடைய சக தொழிலாளர்களுக்காக எப்படி தன் வாழ்வை அர்ப்பணித்தார் என்பதும் ஃப்ளாஷ் பேக்காக சொல்லப்படுகிறது.

ரஜினியின் நண்பனாக சத்யராஜ். விஞ்ஞானியான அவர் தனது கண்டுபிடிப்பு ஒன்றுக்கான உரிமம் கோர அது…

Read More

ரெட் பிளவர் திரைப்பட விமர்சனம்

by by Aug 10, 2025 0

1947-இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எதை கையில் எடுத்தாரோ நூறு வருடம் கழிந்தாலும், இந்தியாவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற அதைத்தான் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்கிற கதை. 

அப்படி 2047 – ல் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. மூன்றாம் உலகப் போர் எல்லாம் அப்போது முடிந்து விட்டதாம். எல்லா நாடுகளும் மால்கம் என்கிற ஆதிக்க ஆயுத சக்தியின் கீழ் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

போப் வாழும் குட்டி நாடான வாடிகன் கூட மால்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எல்லா உலக…

Read More

நாளை நமதே திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2025 0

எம்ஜிஆர் நடித்து ‘ நாளை நமதே’ என்றொரு படம் வந்தது. ஆனால் கற்பனைக் கதையான அதற்கு வைக்கப்பட்ட தலைப்பை விட இந்தத் தலைப்பு மிகச் சரியாக இந்த கதையில் பொருந்தி இருக்கிறது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்தான் கதையின் களம். ஒரு கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது அது ரிசர்வ்  தொகுதியாக அறிவிக்கப்பட்டதில் ஒரு கொலை விழுந்து கலவரம் வெடிக்க… மீண்டும் அது பொதுத் தொகுதியாக அறிவிக்கப் படுகிறது. அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட ஆதிக்க…

Read More

மாமரம் திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2025 0

காதலர்கள் சாப்பிட்டு விட்டுப்போட்ட ஒரு மாங்கொட்டை எப்படி வளரத் தொடங்கி கிளைத்து எழுகிறதோ, அப்படி நாயகன் ஜெய் ஆகாஷின் காதலும் முளை விட்டு எழுந்து பின் வெட்டப்பட்டு கடைசியில் எப்படி துளிர்த்து மரமாகிறது என்று சொல்லும் கதை.

இதை ஜெய் ஆகாஷ் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். ஆனால், ஒரு மாமரம் வளரும் காலகட்டம் வரை அவரும் அதனுடன் உருவம் மாறி வருடக் கணக்காக காத்திருந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

அதற்காக இளமையான தோற்றம் முதல் இப்போதைய…

Read More

வானரன் திரைப்பட விமர்சனம்

by by Aug 8, 2025 0

தலைப்பே நம்மை பெரிதாக ஈர்க்க அத்துடன் நாகேஷின் பேரன் (ஆனந்தபாபுவின் மூத்த மகன்) பிஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதுடன் சூப்பர் சிங்கர் வர்ஷா அவருடன் நடிக்கும் படம் என்பதாலும் நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமந்து இருக்கிறது இந்த படம்.

ஆஞ்சநேயர் வேடம் அணிந்து அருளாசி தருவதையே தங்கள் வாழ்வியலாக கொண்டு வாழும் சிலரை பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு வானரனாக அறிமுகமாகிறார் இந்த பட நாயகன் பிஜேஷ் நாகேஷ்.

அப்பாவியாக இருக்கும் அவரது ஒரே நோக்கம் தன்னுடைய ஐந்து…

Read More