August 14, 2026
  • August 14, 2026
Breaking News

Currently browsing அரசியல்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியைத் தொடர மலேசியா உதவும் – முதல்வரிடம் மலேசிய அமைச்சர் உறுதி

by by Mar 30, 2022 0

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சென்னையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் (மார்ச் 30) சந்தித்துப் பேசினார்.

மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமிழக முதல்வருடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்திற்கு வெளியில் உலகிலேயே அதிகம் தமிழர்கள் வசிக்கும் நாடான மலேசியாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வருகை தர வேண்டும் என்று…

Read More

இந்தியாவில் 3.20 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் பிரதமர் உறுதி

by by Mar 19, 2022 0

டெல்லி – இன்று 14 வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் வரவேற்றார். 14-வது உச்ச மாநாட்டில் பிரதமர் இருவரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ…

Read More

ஹிஜாப் தடை தொடர கர்நாடக உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு

by by Mar 15, 2022 0

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும்…

Read More

சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது

by by Mar 7, 2022 0

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற, இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது.
 
உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.
 
பிரிவினைவாத கிழக்குப் பகுதிகளான லுகான்ஸ்க், டோனட்ஸ்கில்…

Read More

முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து பாடல் – அமைச்சர் முன்னிலையில் வெளியிட்ட சிங்காரவேலன்

by by Mar 1, 2022 0

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரேஷன்ஸ் சிவா அவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்.

அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை மக்களிடம் கொண்டு…

Read More

பள்ளிக்கரணை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சீமான் வலியுறுத்தல்

by by Feb 2, 2022 0

பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்றாது, அந்நிலத்தைச் சிதைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காது அலட்சியப்போக்கினை வெளிப்படுத்தும் தமிழக அரசின் செயல் பெரும் ஏமாற்றமளிக்கிறது. நீராதாரத்தைத் தேக்கி வைப்பதில் பெரும்பங்காற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி வருவதும், அதனை ஆளும் வர்க்கம் தடுக்கத் தவறுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

சென்னையின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் மிக முக்கியமான ஒன்றாகும். 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலமானது தொடர் ஆக்கிரமிப்புகளின் காரணமாகத் தற்போது வெறும்…

Read More

பாஜக முடிவால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

by by Jan 31, 2022 0

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடனான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தனித்து போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.
 
அதேசமயம், அதிமுகவுடனான கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து இருக்கும் என்றும், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை கூட்டணியில் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 
 
பாஜகவின் இந்த முடிவு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது…
 
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. ஆனால்…

Read More

இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – விடுதலைச் சிறுத்தைகள்

by by Jan 21, 2022 0

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின்…

Read More

பிரதமர் மோடிக்கு வாங்கப்பட்டுள்ள அதி நவீன கார்கள் பற்றி அரசு விளக்கம்

by by Dec 30, 2021 0

பிரதமர் மோடி பயணிக்க ரூ.12 கோடி விலையில் இரண்டு ‘மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பற்றிய புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டன.

அந்தத் தகவல்களில் இருந்து…

ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டுள்ள கார்களின் விலை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள விலையில் மூன்றில் ஒரு பங்குதான்.

எஸ்.பி.ஜி. (அதிரடி கமாண்டோ படை) பாதுகாப்பு வரையறையின்படி 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

Read More

பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் – எடப்பாடி பழனி்சாமி அறிக்கை

by by Dec 21, 2021 0

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு தாலுக்கா, கோதவாடி பஞ்சாயத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளம் மற்றும் வரத்துக் கால்வாய், 2017-2018-ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கிராம மக்களின் பங்களிப்புடன் தூர் வாரப்பட்டன.  

இந்த குளம் நேற்று நிரம்பியதை அடுத்து வருண பகவானுக்கு நன்றி…

Read More