ரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா இதைப் படியுங்க
சகாயம் ஐஏஎஸ் உடன் விஜய் இணைய வாய்ப்பில்லை – எஸ் ஏ சி
காஞ்சிபுரத்தில் விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாக செய்யாதீர்கள். அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் மாறிக் கொண்டே வருகின்றது. அதனால் மக்களிடம் அரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் வெற்றியடைய முடியும்…” என்றார்.
“நாட்டைக்…
Read Moreரஜினியை இலங்கைக்கு அழைத்த முன்னாள் முதல்-மந்திரி
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் இல்லையோ ஆனால் அவர் அரசியலுக்குள் இருப்பது உறுதியான விஷயம்.
Thamizharkal எந்த நாட்டு அமைச்சர்களோ முதலமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வரும்போது ரஜினியை பார்ப்பது என்பது ஒரு வாடிக்கையான செயலாகி விட்டது.
அப்படி தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.
அப்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து ரஜினியிடம் அவர் விளக்கமளித்தார்.
அத்துடன் ரஜினியை இலங்கைக்கு…
Read Moreதர்பார் சசிகலா தொடர்பான வசனம் நீக்காவிட்டால் வழக்கு
நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது
அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக இடித்து தள்ளினர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையறிந்த நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார்.
அவருடைய ஆசிரமம் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமான நில ஆக்ரமிப்பில் கட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
விரைவில் ஜியோ மார்ட் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்
விரைவில் துவங்குகிறது “ஜியோ மார்ட்” நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்!*
வால்மார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கும் வகையிலான சூப்பர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்களை துவக்க உள்ளது.
“நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட், தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யான்…
Read Moreகடும் குளிர் காரணமாக டெல்லியில் ரெட் அலர்ட்
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை புத்தாண்டு வரை தொடரும் எனவும் கூறியுள்ளது.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான ஓடு பாதையில் 50 மீட்டர் முதல் 175 மீட்டர் வரை மட்டும் வெளிச்சம்…
Read Moreஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்(90) நேற்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மோகன் உயிர் பிரிந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991-ல் மோகன் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read Moreலக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து
லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள், திரு லக்ஷ்மண், திரு முருகவேல் ஆகிய இரு சகோதரர்களும், திருமதி. புனிதா என்ற சகோதரியும்…
Read Moreநேருக்கு நேர் மோதிய ரயில்கள் விபத்து வீடியோ
நேற்று காலை ஹைதராபாத்திலுள்ள கச்சேகுடா ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர் உள்பட 11 பேர் காயமடைந்தனர் அல்லவா..?
அந்த விபத்து ஏற்பட்டபோது அருகிலிருந்த சிசிடிவி மூலம் அந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரிய வந்துள்ளது.
இரண்டு ரயில் டிரைவர்களுமே ஒன்றை ஒன்று பார்த்து வேகத்தைக் குறைத்துள்ளனர். அதில் அதிவேக ரயில் கிட்டத்தட்ட நிற்கும் நிலைக்கு வந்துவிட, மெட்ரோ ரயில் மட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தியும் நிற்காமல் மித வேகத்தில் சென்று மோதியது.
இதில்…
Read More