April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • மக்கள் நீதி மன்றம் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு
May 8, 2020

மக்கள் நீதி மன்றம் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு

By 0 601 Views
தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 
நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. 
 
குடிப்பவர்களைத் தவிர இந்த ஏற்பாட்டை யாருமே வரவேற்கவில்லை. குடிப்பவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். 
 
இதற்கிடையை தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

இது மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனாலும் கமல் தனது ட்வீட்டில்

“நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி..!” என்று தெரிவித்திருக்கிறார்.