தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பெரு மக்களுக்கு..
அன்பான வணக்கம்
நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் .
அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து…
Read More
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் டேனி படம் நாளை (ஆகஸ்ட் 1 ஆம் தேதி) ZEE5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தில் வரலட்சுமிக்கு இணையான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார். களவாணி2’ மூலம் வில்லத்தினத்தில் வித்தியாசத்தை காட்டி மிரட்டியவர் நடிகர் துரை சுதாகர்.
டேனி யில் அப்படி என்ன கேரக்டராம் அவருக்கு..?
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த…
Read More
தமிழ் படத்தை இயக்க வந்திருக்கும் அத்தனை இயக்குனர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் செய்வதாகவே இருக்கும்.
அப்படிப்பட்ட ரஜினியே போன் செய்து ” எனக்கு ஒரு கதை தயார் பண்ணி வை…” என்று சொன்னால் அந்த இயக்குனரின் அதிர்ஷ்டத்தையும் திறமையையும் எப்படி பாராட்டுவது?
அப்படி ஒரு அதிர்ஷ்டக்கார டைரக்டராக ஆகியிருக்கிறார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.
சமீபத்தில் OTTயில் ரிலீசான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை ரஜினி இப்போது தான்…
Read More
தமிழ், தெலுங்கில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் அனில் முரளி.
தமிழில் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனுசுடன் கொடி, சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கல்லீரல் பிரச்சினைக்காக கேரளா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருத்தார்.
இந்த நிலையில இன்று (வியாழக்கிழமை) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 56தான் என்பதும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.
அனில் முரளி மறைவுக்கு…
Read More
பாகுபலி படத்தின் மூலம் உலகத்தில் புகழின் உச்சம் தொட்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இன்று பதிவிட்டுள்ள டுவீட்டில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அந்த ட்விட்டர் செய்தியில் ” எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் இருந்தது. நாங்கள் அனைவரும் கோவிட் டெஸ்ட் செய்து கொண்டோம். எதுவும் இருக்காது என்றுதான் நினைத்தோம். ஆனால் மெலிதாக கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நாங்கள் குடும்பத்துடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி முறையான மருந்துகள் எடுத்துக்…
Read More
ஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த நில மோசடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சாமானியர்கள் பாதிக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இப்போதோ பிரபலங்கள் பலர் ரியல்…
Read More