April 30, 2025
  • April 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா
July 29, 2020

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா

By 0 589 Views

பாகுபலி படத்தின் மூலம் உலகத்தில் புகழின் உச்சம் தொட்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இன்று பதிவிட்டுள்ள டுவீட்டில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அந்த ட்விட்டர் செய்தியில் ” எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் இருந்தது. நாங்கள் அனைவரும் கோவிட் டெஸ்ட் செய்து கொண்டோம். எதுவும் இருக்காது என்றுதான் நினைத்தோம். ஆனால் மெலிதாக கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நாங்கள் குடும்பத்துடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி முறையான மருந்துகள் எடுத்துக் கொண்டு கொரோனாவுக்கு எதிர்ப்பு சக்தியை பெறுவோம். அப்போதுதான் கொரோனா ட்ரீட்மென்ட் கான பிளாஸ்மா தானம் செய்ய முடியும்..!” என்று தெரிவித்திருக்கிறார்.

அவரும் அவரது குடும்பத்தினரும் விரைவில் நலம் பெற வேண்டும்..!

Ss rajamauli family quarantined with COVID 19

Ss rajamauli family quarantined with COVID 19