இன்று தனது 44வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,
“இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும் பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய விஷால், ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும்…
Read More
பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார்.
பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.
தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி…
Read More
நல்லெண்ணெய் விளம்பரத்தால் புகழ்பெற்று நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்பட்ட நடிகை சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.
அவருக்கு வயது 56. கணவர், மகளுடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.
சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா”. இந்தப் படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார். 2020 ஜனவரி 3’ம் தேதி படம் வெளியானது.
சித்ராவின் மகள் ஸ்ருதி இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். ஸ்ருதியை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள்…
Read More
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிரஞ்சீவி 153’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு, இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இப்படத்தின் பணிகள் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.
இப்படத்தை கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ்…
Read More
அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இயக்கியுள்ள படம் ‘மரபு’.
இதில் இவருக்கு ஜோடியாக இலக்கியா நடித்திருக்கிறார். வில்லனாக ஆனந்த பாபுவும், நாயகியின் அம்மாவாக கருத்தம்மா ராஜஶ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.
இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம்.
எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான…
Read More
துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் அதற்கு பின் பெரிய அளவில் எந்த படத்திலும் பெயர் வாங்கவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தங்கினால் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற அளவில் அந்த முயற்சியையும் செய்து பார்த்தார். அப்போதும் அவர் கைவசம் படங்கள் இல்லை.
இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தன் சமூக வலைதள பக்கங்களில் அவரே இதனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்களையும் கவனமாக இருக்கச் சொல்லியும்…
Read More