January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ்ப்படம் ஜெய் பீம்

by by Jan 21, 2022 0

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு, இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது.

தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த ஆண்டு…

Read More

நியூயார்க் மாசிடோனியா சர்வதேச படவிழா விருதுகளை வென்ற முதல் நீ முடிவும் நீ

by by Jan 20, 2022 0

தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த  வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ”  திரைப்படம் வெளியாகிறது.

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திரை முன்னோட்டம் திரைப்பட குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக…

Read More

பம்பர் படத்தில் வெற்றிக்கு ஜோடியாகும் ஷிவானி

by by Jan 20, 2022 0

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

Read More

விவாகரத்துகள் கொண்டாடப் பட வேண்டும் – ராம் கோபால் வர்மா

by by Jan 20, 2022 0

அடுத்தடுத்து சமந்தா மற்றும் தனுஷ் திருமண உறவுகள் விவாகரத்தில் வந்து முடியஇயக்குநர் ராம் கோபால் வர்மா திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே அடிக்கடி ரஜினி பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்மறையான கருத்துக்களை சொல்லி அவரது ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இப்போது ரஜினி குடும்பத்துக்குள் ஒரு பிரச்சனை என்றதும் இப்படி விவாகரத்தை ஆதரித்து கருத்துக்களை கூறியிருப்பதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

”பிரபலங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகள் குறித்து…

Read More

குக் வித் கோமாளி புகழை மணக்கப் போகும் பெண் இவர்தானாம்

by by Jan 19, 2022 0

குக் வித் கோமாளி புகழ் ‘ புகழ் ‘, அவரது வருங்கால மனைவி என அறிமுகப் படுத்தப்பட்ட பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவரை அப்போது கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த, (பானா காத்தாடி படத்தில் நடித்த) உதயராஜ் பார்த்து ஒரு நடிகனாக அடையாளம் கண்டார்.

புகழின் செயல்பாடுகளை கவனித்த அவர்…

Read More

பாலாஜி மோகன் தயாரிப்பில் பிரசன்னா எஸ்பி சரண் நடிக்கும் அசத்தல் இணைய தொடர்

by by Jan 18, 2022 0

Trend Loud India Digital மற்றும் இயக்குநர், தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பை பெருமையுடன் அறிவித்துள்ளன.

இந்த புதிய தமிழ் இணைய தொடர் பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார்.

அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை…

Read More

வருகிறது சின்னத்திரை பிளாக் பஸ்டர் ரமணி vs ரமணி சீசன் 3

by by Jan 18, 2022 0

மீண்டும் வந்துவிட்டார்கள் ரமணி vs ரமணி. இந்த முறை இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக, மிக நவீனமாக வந்துள்ளார்கள்.

ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும்.

இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” தொடரானது இதற்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சின்னத்திரையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல்,…

Read More

நக்கலைட்ஸ் வழங்கும் அம்முச்சி சீசன் 2 காமெடி இணையத் தொடர்

by by Jan 18, 2022 0

OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன.

அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது.

உண்மையில், ‘அம்முச்சி’ என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு அம்முச்சி…

Read More

தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிகின்றனர் – 18 வருட மண வாழ்க்கை முடிவு பெறுகிறது

by by Jan 17, 2022 0

நடிகர் தனுஷும், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐஸ்வர்யாவும், தனுஷும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். 

“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.  இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.  ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.  

தயவு…

Read More

நாய் சேகர் திரைப்பட விமர்சனம்

by by Jan 17, 2022 0

சிலந்தி கடித்தால் ‘ஸ்பைடர் மேன்’ ஆக முடியும் என்றால், நாய் கடித்த சேகர் ‘நாய் சேகர்’ ஆக முடியாதா..? என்ற ‘கடி’தான் படத்தின் லைன்.

ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். அவரது முயற்சிகள் சாத்தியமில்லை என்று அவரை விஞ்ஞான கமிட்டி விலக்கி வைக்கிறது. எனவே வீட்டில் இருந்து கொண்டே ஆராய்ச்சிகளைத் தொடர்கிறார்.

ஜார்ஜின் அருகாமை வீட்டில் குடியிருக்கும் ஐடி ஊழியர் சதீஷை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் கடித்து விட,…

Read More