June 30, 2025
  • June 30, 2025
Breaking News
January 20, 2022

பம்பர் படத்தில் வெற்றிக்கு ஜோடியாகும் ஷிவானி

By 0 559 Views

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஷிவானி நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.