January 26, 2026
  • January 26, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

என் சமுதாயக் கோபம்தான் ராயர் பரம்பரை படம் – இயக்குனர் ராம்நாத்.டி

by by Jul 1, 2023 0

“ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”.

மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம்…

Read More

நல்ல படத்தில் நடித்ததில் திருப்தி -போர் தொழில் வெற்றி விழாவில் சரத்குமார்

by by Jun 30, 2023 0

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது….

Read More

மாமன்னன் திரைப்பட விமர்சனம்

by by Jun 30, 2023 0

“சமூக நீதியும், உரிமையும் விட்டுக் கொடுத்து வருவதல்ல…” என்ற கருத்தைக் கடத்த புனையப்பட்டிருக்கும் அரசியல் படம் இது.

மிகவும் முக்கியமான இந்தக் கருத்தைச் சரியாகக் கட்டமைத்திருக்கிறாரா இயக்குனர் மாரி செல்வராஜ் என்பதைப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் காசிபுரம் என்ற ரிசர்வ் தொகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ வாக இருக்கிறார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த (மாமன்னன்) வடிவேலு. அவரது மகன் அதிவீரனாக வரும் பட்டதாரியான உதயநிதி ஸ்டாலின், அடிவகை தற்காப்புக் கலை ஆசானாகவும், பன்றிகள் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராகவும் வருகிறார்.

இன்னொரு…

Read More

பிரைம் வீடியோவில் ஸ்வீட் காரம் காபி தொடர் ஜூலை 6 அன்று வெளியாகிறது

by by Jun 27, 2023 0

பிரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ், ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6 அன்று பிரீமியர்; ஒரு ஆரோக்கியமான குடும்பம் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மறக்க முடியாத மகிழ்ச்சி சவாரியில் பார்க்கிறது.

லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் கீழ் ரேஷ்மா கட்டலா உருவாக்கியது. ஸ்வீட் காரம் காபியை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் இயக்கியுள்ளனர்.

மது, லட்சுமி, சாந்தி ஆகியோர் நடித்துள்ள எட்டு எபிசோட்கள் கொண்ட தமிழ்த்…

Read More

ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த தமிழரசன்

by by Jun 27, 2023 0

விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம்
ZEE5 தளத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான…

Read More

பம்பர் படத்தில் முதன் முதலாக நடனம் ஆடுகிறேன் – நடிகர் வெற்றி

by by Jun 26, 2023 0

“பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…

வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’.

ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர்…

Read More

தலைநகரம் முதல் பாகத்தை விட 2வது பாகம் நன்றாக உள்ளது என்கிறார்கள் – VZ துரை

by by Jun 26, 2023 0

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர்…

Read More

பாயும் ஒளி நீ எனக்கு திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

பாரதியின் வரிகள் பவர்ஃபுல்லானவை என்றாலும்… இந்த படத்துக்கு இந்த தலைப்பு பக்காவாக பொருந்துகிறது என்றாலும்… இத்தனை நீளமான தலைப்பை எழுத முடியாமல் போஸ்டரிலேயே சுருக்கி சுருக்கி எழுதி இருப்பதிலேயே தம் கட்டி இருக்கிறார்கள்.

இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் – இப்படி நீளமான தலைப்புகளை வைப்பதில் இருக்கும் சிரமத்தை. இதையும் படித்து புரிந்து கொண்டு தியேட்டருக்குள் வருபவர்களையாவது படம் திருப்திப் படுத்துகிறதா என்று பார்க்கலாம்.

முழுக்க பார்வைத் திறன் இல்லாத நாயகர்களை சார்லி சாப்ளின் காலத்தில் இருந்தே பார்த்து விட்டதாலோ…

Read More

அழகிய கண்ணே திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

இதுவரை வந்த சாதியக் காதல் சொல்லும் படங்களில் ஒரு பக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், இன்னொரு பக்கத்தில் வேறுபட்ட சாதியினரும் இருந்திருக்கிறார்கள். அந்த இன்னொரு பக்க சாதியினர் பிராமணர்களாக அதிகம் இருந்ததில்லை.

அப்படி இருந்த படங்களிலும் பிராமணர்கள் அமைதியான போக்கை மேற்கொள்பவர்களாகவும், எதிர்தரப்பு சாதியினர் மட்டுமே வன்முறை மிகுந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில்தான் முதல்முறையாக தங்கள் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போன இன்னொரு சாதியைச் சேர்ந்த ஆணை பிராமண சமூகத்தினர் வன்முறைப் பாதையில் கொலை செய்யும் அளவுக்குப்…

Read More

நாயாடி திரைப்பட விமர்சனம்

by by Jun 25, 2023 0

இதுவும் ஒரு திரில்லர் ஹாரர் வகையறா படம்தான். இப்போதைய ட்ரெண்டின் படியே இந்த படத்துக்கும் ஒரு முன்னோட்டக் கதை சொல்லப்படுகிறது.

அரசர் காலத்தில் சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்ததாகவும், அந்தக் கடைசிப் பிரிவில் இருப்பவர்கள் பிற மூன்று சமூகத்தினருக்கு எடுபிடிகள் ஆகவும் ஏவலாட்களாகவும் அடிமைகளாகவும் நடத்தப்பட்டதாகவும் அவர்களே நாயாடி என்ற பிரிவைப் சேர்ந்தவர்களாகவும் சொல்லப்படுகிறது.

சமூகத்தில் தங்களுக்கு என்று எந்த பாதுகாப்பும் இல்லாத சூழலில் அவர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தைப் படைத்து அந்தத் தெய்வத்துக்கு பலிகள் கொடுத்து வருகின்றனர்.

ஒரு…

Read More